வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க.. 4 நடிகருக்கும் விஜய் சேதுபதி போட்டுக் கொடுத்த ரூட்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் அவருக்கு கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் குணச்சித்திரம், வில்லன் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் கலக்கி வருவது அவருடைய தனி சிறப்பு.

அதனால்தான் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இவரைப் போலவே பிரபல ஹீரோக்களாக இருந்த சிலர் தற்போது வில்லன் கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

விக்ராந்த்: இவர் பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் மற்ற ஹீரோக்களை போல் இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது. இதனால் அவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து திரைப்படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார். அதை அடுத்து இவர் பல திரைப்படங்களில் கேரக்டர் ரோல் செய்து வருகிறார்.

சக்தி வாசு: பிரபல இயக்குனர் வாசுவின் மகனான இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு இயக்குனரின் மகனாக இருந்தும் இவரால் சினிமா துறையில் வெற்றி நடிகராக வலம் வர முடியவில்லை. இதனால் அவர் சில திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு ஒர்க்கவுட் ஆகவில்லை.

ஜெய்: சென்னை 28 திரைப்படத்தின் மூலம் நம் அனைவரின் கவனத்தையும் பெற்ற இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு சில திரைப்படங்களை தவிர அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த திரைப்படங்களும் அமையவில்லை.

அதிலும் இடையில் அவருக்கு இருந்த பல பிரச்சனையின் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அதர்வா: ஒரு காலத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர் முரளியின் மகனான இவர் தன்னுடைய அருமையான நடிப்பின் மூலம் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தார். ஆனால் இடையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது.

இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்தது. இந்நிலையில் தற்போது அவரை தேடி வில்லன் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவரோ வில்லனாக நடித்தால் மீண்டும் ஹீரோவாக நடிக்க முடியாது என்பதற்காக அந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்து வருகிறார்.

மார்க்கெட் இருக்கும் விஜய்சேதுபதியே வில்லனாக நடிக்கும் பொழுது தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள இவர் ஏன் இவ்வளவு யோசித்து வருகிறார் என்று திரையுலகில் கூறி வருகின்றனர்.

Trending News