ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

துல்கர் சல்மானுடன் இணைந்த டாப் ஹீரோக்கள்.. பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்.!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்போது அங்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தானும் தந்தைக்கு நிகர் தான் என்பதுபோல் படுவேகமாக வளர்ந்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான துல்கர் சல்மானுக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.

மேலும் துல்கர் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகர் தான். அவர் தமிழில் நடித்த வாயை மூடி பேசவும் பேசவும் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

மலையாளத்தில் பல வெற்றி படங்களை வழங்கியுள்ள துல்கர் சல்மான் தற்போது இளம் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் குரூப் (Kurup) எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிருத்விராஜ் மற்றும் துல்கர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இப்படத்தில் பிருத்விராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். இவர்கள் இருவருமே தற்போது மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருப்பதால் இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kurup-movie-dulquer
kurup-movie-dulquer

பிருத்விராஜ் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களான நிவின்பாலி, டொவினோ தாமஸ், பரத் ஆகியோரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் நடிகர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருவதால் இதுபோன்ற மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அங்கு மிகவும் சாதாரணமாக பார்க்கப்படுகிறது.

Trending News