ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

புஷ்பா படத்திற்கு நோ சொன்ன டாப் ஹீரோக்கள்.. இப்போ வசூலை பார்த்து வயித்தெரிச்சல் பட்டு என்ன பிரயோஜனம்

கடந்த ஆண்டின் மிக பெரிய பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையை புஷ்பா திரைப்படம் சம்பாதித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் 50 நாட்களை கடந்து இந்திய அளவில் 365 கோடி ரூபாயும் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. இப்படி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படத்தை எத்தனை நடிகர்கள் வேண்டாம் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என ஒதுக்கி இருக்கிறார்கள் தெரியுமா..?

முதலில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவைதான் கேட்டு இருக்கின்றனர். ஆனால் அந்த கேரக்டர் நெகட்டிவாக எழுதப்பட்டு இருக்கிறது. தன்னுடைய ரசிகர்களுக்கு அது பிடிக்காது என்று அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அடுத்தாக ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கேட்கப்பட்டது இந்தி திரையுலகில் மிகவும் கவர்ச்சியாக வலம் வரக்கூடிய நடிகையான திசா படானி தான். இந்த படத்தின் தயாரிப்பாளரும் எவ்வளவு செலவானாலும் அவரை நடிக்க வைத்து விடலாம் என்று நினைத்து கேட்ட போது சில காரணங்களால் அந்த ஆஃபர் வேண்டாம் என்று அவர் சொல்லி விட்டாராம்.

படத்தை பற்றி எவ்வளவு பேசினாலும் புஷ்பா படம் என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது ஊ சொல்றியா பாடலும் சமந்தாவின் அசத்தலான அசைவுகளும் தான். ஆனால் அந்த பாடலுக்கு அவர் முதல் தேர்வு இல்லையாம். இந்தியில் நடனம் ஆடி பல ஹிட் பாடல்களை கொடுத்த நோரா பெட்டகி தான் புஷ்பா படக்குழுவின் முதல் தேர்வு.

ஆனால் அந்த ஒரு பாடலுக்கு அவர் கேட்ட தொகை மிக அதிகம் என கூறப்படுகிறது. இதனால் தான் சமந்தாவுக்கு அந்த பாடல் வந்தது. சும்மா சொல்ல கூடாது சமந்தா நடனத்தில் உண்மையில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் . அதுமட்டுமில்லாமல், ராஷ்மிகா மந்தனாவின் ஹீரோயின் கதாபாத்திரமும் சமந்தா நடிப்பதாக இருந்த கதாபாத்திரம் தான்.சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் அணுகியது விஜய் சேதுபதியை தான். ஆனால் டேட் இல்லை என்று படம் கைமாறி போய் இருக்கிறது. தமிழில் இத்தனை படம் நடித்து வாரம் ஒன்று ரிலீஸ் செய்வதற்கு பதில் புஷ்பா படத்தில் நடித்து இருக்கலாம் என்று அவரது ரசிகர்களும் கவலை கொள்ளதான் செய்கின்றனர்.

இப்படி இந்திய அளவில் பிளாக் பஸ்டர் படத்தை இத்தனை நடிகர் நடிகைகள் பல்வேறு காரணங்களால் தவறவிட்டு விட்டனர். நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை தெரு நாய்க்கு தான் கிடைக்கனும்னு விதி இருந்தா அத யாராலையும் மாத்த முடியாது என்பது போல யார் யாருக்கு எப்போ எது கிடைக்கும் கிடைக்காது என்பதை யாரும் சொல்ல முடியாது.

- Advertisement -spot_img

Trending News