வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள்.. ரஜினி, விஜய் எத்தனையாவது இடம்?

ஹாலிவுட்டுக்கு அடுத்து இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகர்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கி வந்தனர். அது சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் புறக்கணிப்பு செய்யத் தொடங்கியதில் இருந்து, அங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. வசூல் குவிப்பதில்லை என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் இறங்குமுகம் இருக்கும் போது, கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் வெளியான பான் இந்தியா படங்கள் ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்காக மாறிவிட்ட தால், அப்படங்கள் ரூ.1000 கோடி, ரூ.500 கோடி என கல்லா கட்டிவருகிறது.

இதனால் பாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாகவும், சில முன்னணி நடிகர்கள் பாலிவுட் ஹீரோக்களை விட கூடுதலாகவும் சம்பளம் பெற்று வருகின்றனர் கோலிவுட், டோலிவுட் சினிமாவில். எனவே இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

இந்திய சினிமாவில், அதிக சம்பளம் பெறும் 6 முக்கிய நடிகர்கள்

இந்திய சினிமாவில், அதிக சம்பளம் பெறும் 6 முக்கிய நடிகர்களை இதில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னணி நடிகர்கள் ஆவர்.

அதன்படி, நடிகர் பிரபாஸ் ஒரு பட த்தில் நடிக்க ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கல்கி படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த நிலையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி நடிகர் அமீர்கான், தற்போது சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும், அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.120 கோடி முதல் ரூ. 275 கோடி சம்பளம் பெறுவதாக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க ரூ.200 கோடி சம்பளம் பெறும் நிலையில், வேட்டையன் படத்தைத் தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க ரூ.275 கோடி சம்பளம் வாக்கியுள்ளார்.

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பதான், ஜவான் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஒரு படத்தில் நடிக்க ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது நடித்து வரும் டங்க்கி படத்தில் நடிக்க ரூ.250 கோடி வாங்கியதாக் கூறப்படுகிறது.

விஜய், தி கோட் படத்தில் நடிக்க ரூ.230 கோடி சம்பளம் வாங்கியதாகவும், விஜய்69 படத்தில் நடிக்க ரூ.275 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு ஸ்டைலிஸ் ஸ்டார் அல்லு அர்ஜூன் புஷ்பா 2 பட த்தில் நடிக்க ரூ.300 கோடி சம்பளம் வாங்கியதாகவும், ஆசியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் முதலித்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பட்டியலில் பிரபல இதழில் வெளியானது குறிப்பிட த்தக்கது.

Trending News