கடந்த சில வருடங்களாக விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே சர்வ சாதாரணமாக 200 கோடி வசூலை அள்ளி வருகிறது. முன்னரெல்லாம் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள் தற்போது விஜய் படங்கள் 200 கோடி வசூல் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை.
அந்த அளவுக்கு வழக்கமாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அதிக அளவில் வரவேற்பை பெற்று வருவதுதான். குறிப்பாக தெலுங்கில் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.
இதன் காரணமாக தற்போது விஜய்யின் படம் தெலுங்கில் மட்டும் சராசரியாக 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களிலும் இதே நிலைமை தான். இப்படி வசூல் மன்னனாக படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்லும் விஜய்யை வைத்து படம் தயாரிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.
அந்த வகையில் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருவதில் ராஜூ என்பவர் எப்படியாவது தளபதி 66 படத்தை தயாரித்து விட வேண்டும் என விஜய்யின் வட்டாரங்கள் மூலம் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறாராம். விஜய் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும் கூறியுள்ளார்.
ஒரு படம் கால்ஷீட் கிடைத்து விட்டால் போனிகபூர் அஜித்தை வைத்து தொடர்ந்து தமிழ் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக காலூன்றியது போல நம்மளும் விஜய்யை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்கலாம் என ஐடியா போட்டுள்ளார் தில் ராஜூ.

ஏற்கனவே விஜய்யின் தளபதி 66 படத்துக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் துண்டு போட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி விஜய்யின் காதுக்கு எட்ட, இப்போதைக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் தான் அடுத்த தயாரிப்பாளர் என உறுதியாக கூறிவிட்டாராம். இதைக்கேட்ட தேனாண்டாள் முரளி செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என கொண்டாட்டத்தில் உள்ளாராம்.