வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

1000 எபிசோடை கடந்த டாப் சீரியல்.. நாலு வருஷமா உருட்டப்படும் சக்காளத்தி சண்டை

Top serial crossed 1000 episodes: பொதுவாக டிஆர்பி-யில் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும் அதிலும் விஜய் டிவியில் டாப் சீரியலாக பார்க்கப்படும் நாடகம் இப்போது மூன்று வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்து நான்காவது வருடத்தில் காலடி வைத்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் இப்போது 1000 எபிசோடுகளை எட்டி சாதனை படைத்திருக்கிறது. இல்லத்தரசிகளின் போராட்டத்தை அப்படியே காட்டக்கூடிய பாக்கியலட்சுமி சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

50 வயதில் கோபி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை கரம் பிடித்த போதெல்லாம் இதன் டிஆர்பி எகிறியது. இருப்பினும் ஒரே வீட்டில் சக்காளத்தி சண்டையை வைத்து சில காலம் உருட்டப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்கிறது.

Also Read: தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி

1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவியின் டாப் சீரியல்

பாக்கியாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கையில் சூனியக்காரர்கள் கணேஷ் மற்றும் மாலினி இருவரும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பாக்யாவும் திணறுகிறார். இருப்பினும் தற்சமயம் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் 1000-வது எபிசோடில் அடி எடுத்து வைப்பதால் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அதிலும் சோத்து மூட்ட இனியா, நாலு வருடத்திற்கு முன்பு இதே நாளில் இனியா கேரக்டரின் ஆடிஷன்காக வந்த போது எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also Read: பாக்யாவைப் பார்த்து வாய் அடைத்துப் போய் நிற்கும் கோபி அங்கிள்.. சைக்கோ டார்ச்சருக்கு முடிவு கட்டும் மருமகள்

Trending News