வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தளபதியின் பெருந்தன்மையால் டாப் ஸ்டாருக்கு மீண்டும் உச்சம் தொட வாய்ப்பு.. 50 வயதில் அடித்த ஜாக்பாட்

Top star Prashanth success journey starts  because of thalapathy vijay: 90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் ஆக வலம் வந்தவர் பிரசாந்த். தியாகராஜனின் மகன் என்று அடையாளத்துடன் வந்திருந்தாலும் தனக்குரிய தனித்திறமையின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்தார். 

முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை வென்றவர், அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு நாயகன் ஆனார். அஜித், விஜய்க்கு முன் இவர் தான் தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்துள்ளார். ஆனால் இப்போது நிலைமை அப்படியே  தலைகீழானது.  

ஒரு கட்டத்தில் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியினாலும், பட வாய்ப்புகள் குறைந்தனாலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். 

கடைசியாக இவர் நடித்த அந்தகன் திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வெந்து நொந்து போனவர் வெங்கட் பிரபுவின் G.O.A.T திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க சம்மதித்தார். 

பான் இந்தியா மூவியாக ரெடியாகி வருவதாலும், மல்டிஸ்டார் சப்ஜெக்ட் என்பதாலும் ஓகே சொன்னார் பிரசாந்தின் தந்தை. இருந்த போதும் G.O.A.T படத்தில் பிரசாந்த்திற்கு விஜய்க்கு நிகராக நல்ல பெயர் வாங்கக்கூடிய கேரக்டர் அமைந்துள்ளதாம்.

G.O.A.T படத்தில் தளபதியின் பெருந்தன்மை

விஜய் அளவுக்கு இவருக்கு இம்பார்ட்டன்ஸ் என்று கூறப்படுகிறது. விஜய்யும் மிக பெருந்தன்மையானவராம் நிறைய ஹீரோக்கள், தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் நடிப்புத் திறமை சிறிது மேலோங்கினால் கூட அந்த  குறிப்பிட்ட சீன்களை வெட்ட சொல்லி விடுவார்களாம். 

ஆனால் விஜய் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்து நடிக்க சொல்லியதோடு, எடிட்டிங்ளையும் தன்னுடைய சீன்களை மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி உள்ளாராம். தளபதியின் பெருந்தன்மையால் G.O.A.T படத்தில் நடித்த நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, அவர்களது சீன்களும் பிரம்மாதமாக அமைந்துள்ளதாம்.

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இவரை விட நல்ல ஸ்கோர் பண்ணி இருந்திருப்பார். அப்பவும் இதே போல் தான் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுத்து அவரையும் கை தூக்கி விட்டார் விஜய். 

G.O.A.T படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்துக்கு, அடுத்துதடுத்து பட வாய்ப்புகள்  அதிகரித்துவருவதாக  பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

Trending News