திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதரிப்புதிரியாக வெளியான தளபதி 67-ல் நடிக்கும் டாப் ஸ்டார்கள்.. மாஸாக வெளியிட்ட லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. எப்போதுமே படக்குழுவினர்கள் தங்களது படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்ஸாக தான் வைத்திருப்பார்கள்.

அப்படி தான் லோகேஷின் விக்ரம் படத்தில் கூட சூர்யா நடிப்பதை மறைமுகமாக வைத்திருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிந்ததால் விக்ரம் ட்ரெய்லரில் சூர்யாவை லோகேஷ் காட்டி இருந்தார். ஆனால் தளபதி 67 படத்தில் நேற்று அதிகாரப்பூர்வ வெளியான நிலையில் இன்று படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

Also Read : அத்தனை பேரையும் ஒரே நாளில் ஜம்மு காஷ்மீரில் ஆஜர் படுத்தும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் தளபதி 67

அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரியா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இவரை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினும் தளபதி 67 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லோகேஷின் இன்ஸ்பிரேஷன் ஹீரோவான மன்சூர் அலிகான் முதல்முறையாக அவருடைய படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகர் மதெவ் தாமஸ் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் அடுத்தடுத்த பிரபலங்கள் யார் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட இருக்கிறது.

thalapathy-67-cast

Also Read : துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. 11 வருடம் கழித்து தளபதி 67ல் விட்டதைப் பிடித்த நடிகை

மேலும் தளபதி 67 படத்தின் திரிஷா, சத்யராஜ் போன்ற பிரபலங்களும் நடிப்பது உறுதி ஆகி உள்ளது. இவர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ போஸ்டரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட உள்ளது. ஆகையால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

gautham-menon-thalapathy-67

Also Read : வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

Trending News