வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்த வருடத்தின் சிறந்த 3 படங்கள்.. செகண்ட் இன்னிங்ஸில் தும்சம் செய்த வடிவேலு

Top 3 films of 2024: இந்த வருடம் வித்தியாசமான கதைக்களத்தில் நிறைய படங்கள் வெளியானது. ஆனால் சிறந்த படங்களாக திரைப்பட குழு மூன்று திரைப்படங்களை தேர்வு செய்து பெருமைப்படுத்தினர். அதிலும் சிறந்த நடிகருக்கான விருது நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுக்கு கொடுத்து கௌரவப்படுத்தினர்.

பொதுவாக காமெடியில் பிச்சு உதறக்கூடிய வடிவேலு, நகைச்சுவைவே இல்லாமல் குணச்சித்திர கேரக்டரில் மாமன்னன் படத்தில் நடித்து அசத்தினார். ரெட் கார்ட் பிரச்சினையில் சிக்கித் தவித்த வடிவேலு, மாமன்னன் படத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி துவம்சம் செய்தார். இந்த படத்தில் இவருடைய அட்டகாசமான நடிப்பிற்காக 2024 ஆம் ஆண்டு சிறந்த நடிகர் என்ற விருதையும் வடிவேலுவுக்கு கொடுத்தனர்.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்தனர். ஜாதி ஏற்றத்தாழ்வுகளை இந்த படத்தில் தோலுரித்துக் காட்டினர். இதனால் 2024 வெளியான சிறந்த மூன்று படங்களில் மாமன்னனும் ஒன்று. இதன் தொடர்ச்சியாக இதுவரை தமிழ் சினிமாவில் சூரியை காமெடி நடிகராக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் விடுதலை படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்து அமர்க்களம் படுத்தினார்.

Also Read: பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போராடும் 4 படங்கள்… ஸ்டைலா கெத்தா லால் சலாம் உடன் போட்டி போடும் கேப்டன் மில்லர்

2024ன் சிறந்த மூன்று படங்கள்

வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் மிரட்டுவிட்டார். இந்த வருடம் வெளியான சிறந்த படங்களில் விடுதலையும் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகிறது. அடுத்த வருடம் ரிலீசாகவும் காத்திருக்கிறது. அதை போல் சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி படம் இந்த வருடம் மார்ச்சில் வெளியானது. தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரக்கணக்கான கதைகள் படமாக்கப்பட்டது.

ஆனால் இந்த மாதிரியான கதை இதுவரை வந்ததில்லை என்று சொல்லலாம். அயோத்தி படத்தில், ஊர் விட்டு ஊரு வந்து இறந்து போன ஒரு பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி பல சிரமங்களுக்கு இடையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஒரு உன்னதமான மனிதனின் கதையைப் பற்றி கூறினர். இந்த படம் 2024ல் வெளியான சிறந்த படங்களில் நம்பர் ஒன் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Also Read: 40 வருட ராஜதந்திரத்தை பயன்படுத்தும் கமல்.. இயக்குனரை பகடைகாயாக யூஸ் பண்ணும் ரங்கராய நாயக்கர்

Trending News