வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. எல்லாருடைய சாபத்தினால் பறிபோகும் பட வாய்ப்பு

அஜித் தற்போது ஒரு மாஸ் இடத்தில் உள்ளார். அவரது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். இப்போது வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இதைத்தொடர்ந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இதற்கான வேலையில் தற்போது விக்னேஷ் சிவன் இறங்கியுள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனர் அஜித்துக்கு மிகப்பெரிய டார்ச்சர் கொடுத்துள்ளார். பல பேருடைய சாபத்தினால் அந்த இயக்குனர் தற்போது படாத பாடுபட்டு வருகிறார்.

Also Read : ரஜினியை பின்பற்றும் அஜித், விஜய்.. எந்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்றாங்க

அதாவது பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள். இந்தப் படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. இதற்காக அஜித்தை நீளமாக முடி மற்றும் தாடியை பாலா வளர்க்க சொல்லி உள்ளார். அதேபோல் அஜித்தும் பாலா சொன்னது போல் மிக நீளமாக முடி, தாடியை வளர்த்துள்ளர்.

மேலும் நான் கடவுள் படத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பாலா முன்னிலையில் மதுரை அன்புச் செழியன் அஜித்துக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் பாலா முதலில் நான் கடவுள் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி தான் அஜித்திடம் சொல்லி உள்ளார். ஆனால் பலமுறை அஜித் முழு கதையையும் சொல்லும்படி கேட்டுள்ளார்.

Also Read : விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்

ஒரு கட்டத்திற்கு மேல் சூட்டிங் நடக்கும் போது தான் முழு கதையையும் நான் எழுதுவேன் என்று பாலா கூறியுள்ளார். இதில் அஜித்துக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் நான் கடவுள் படத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இதனால் அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு பாலா மற்றும் அன்பு செழியன் அழைத்துள்ளனர்.

அங்கு அட்வான்ஸ் வாங்கிய தேதியிலிருந்து வட்டியுடன் பணத்தை கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் என லாக் செய்துள்ளனர். அப்போது பாலா மற்றும் அஜித் இடையே கடுமையான வாக்குவாதம் சென்றுள்ளது. கடைசியில் வேறு வழி இல்லாமல் அஜித் பணத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு நடிகரின் சாபத்தினால் தான் பாலாவின் பட வாய்ப்பு பறிபோவதாக பயில்வான் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Also Read : பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

Trending News