சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தளபதி வாரிசுக்கு கிடைக்கும் மொத்த பணம்.. எல்லாம் கிடைச்சும் வாய் திறக்காத ஜேசன் சஞ்சய்

Total amount available to Thalapathy heir Jason Sanjay for movie: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தடம் பதித்து இருக்கும் தளபதி சினிமாவில் வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போது தமிழக அரசியலிலும் கால் பதித்து முதல்வர் ஆவதற்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஹச் வினோத்தின் இயக்கத்தில் விஜய் 69 படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

2024 டிசம்பருக்குள் தனது படங்களை முடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளாராம் தளபதி.

இவரை தொடர்ந்து இவரது வாரிசு ஜேசன் சஞ்சய் அவர்கள் இயக்குனராகும் கனவோடு தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். 

ஏற்கனவே லண்டன் சென்று  இயக்கம் தொடர்பான படிப்பை முடித்து குறும்படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஒரு தரமான படத்தை கொடுத்தே தீருவேன் என்று, கடந்த ஆண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த ஒப்பந்தம் வெளியாகும் வரை  நடந்த நிகழ்வுகள் யாவையும் தளபதிக்கு தெரியாது என்பது போன்ற செய்திகள் வெளியாகின. 

தனது மகன் படம் தயாரிப்பதற்கான எந்த ஒரு உதவியும் தளபதி செய்யவில்லை என்பதுதான் உண்மை.

இதனால் உண்டான கருத்து வேறுபாட்டால் விஜய்யின் மனைவி சங்கீதா அவர்களின் ஒத்துழைப்பின் பேரிலேயே ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதாக உள்ளது.

தளபதியின் வாரிசுக்கு உதவும் சங்கீதாவின் தந்தை

லண்டனில் மல்டி மில்லியனியராக இருக்கும் சங்கீதாவின் தந்தைதான் ஜேசன் சஞ்சய்க்கு உண்டான அனைத்து நிதி  தொடர்பான உதவிகளையும், தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட உதவிகள் அனைத்தையும் கவனித்துக்  கொள்கிறார் என்பது தகவல்.

ஜேசன் சஞ்சய் படத்தில் யார் நாயகன்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நேரத்தில் வாரிசு நடிகர்களான அதர்வா, துல்கர் சல்மான், துருவ் விக்ரம் என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எல்லாம் கிடைத்த பின்பும் இன்னமும் தனது படம் பற்றி எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தாமல் நடிகரையும்  தேர்வு செய்யாமல் இருந்து வருகிறார் ஜேசன்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து தரமான திரைக்கதையை ரெடி பண்ணி உள்ளாராம் ஜேசன். இவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பில் சிக்ஸர் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.

Trending News