வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விடுமுறை நாட்களிலும் போனியாகாத ஜெயிலர் வசூல்.. 11வது நாளில் செய்த மொத்த கலெக்ஷன், கலங்கிய கலாநிதி

Jailer Box Office Collection: ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் ஐந்து மொழிகளில் வெளியானது. முதல் நாளிலிருந்து இந்த படத்தின் ஆர்பாட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. மேலும் முதல் வாரத்திலேயே ஓரளவு நல்ல லாபத்தை ஜெயிலர் படத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் பெற்றிருந்தது.

அதன்படி முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375 கோடி ஜெயிலர் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் அடுத்த வாரத்தில் இருந்து ஜெயிலர் வசூல் மந்தமடைய தொடங்கியது. தியேட்டர்கள் அதிகமாக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை.

Also Read : 21 வயது குறைந்தவரின் காலில் விழுந்த ரஜினி.. வைரல் போட்டோவால் வெடித்த சர்ச்சை

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் 10 மற்றும் 11 நாளில் பெருத்த லாபத்தை எடுத்து விடும் என கணக்கு போட்டு வைத்திருந்தனர். அது இப்போது சுக்கு நூறாகி விட்டது. இதற்கு காரணம் ரஜினி தான் என்ற ஒரு தரப்பு கூறப்பட்டு வருகிறது. அதாவது தன்னைவிட 21 வயது குறைவாக உள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தமிழ் சினிமாவை தாண்டி அனைத்து மொழியிலும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கும் போது ரசிகர்களால் மற்றொருவரின் காலில் விழுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வுக்கு பிறகு தான் ஜெயிலரின் வசூல் இன்னும் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

Also Read : படத்துல தான் நான் ஆக்ரோஷ வில்லன்.. ஒரு படி மேலே போய் நிஜ ஹீரோவான ரஜினி பட நடிகர்

அதன்படி சனிக்கிழமை 20 கோடி வசூல் செய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெறும் 18 கோடி மட்டுமே வசூலித்தது. மேலும் விடுமுறை நாட்களில் கூட ஜெயிலர் படம் போனியாகாத நிலையில் இனி வரும் வேலை நாட்களில் வசூல் இன்னும் அடிவாங்கும். ஆகையால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கலக்கத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார்.

மேலும் இப்போது வரை ஜெயிலர் படம் ஒட்டுமொத்தமாக 500 கோடி வசூல் செய்துள்ளது. ஆனாலும் ஜெயிலர் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த வசூல் மந்தம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் அடுத்ததாக லியோ படத்திற்கு தான் இப்போது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : அழகை காப்பாற்றிக் கொள்ள ஊசி, கருக்கலைப்பு, கள்ளக்காதல்.. ரஜினி மருமகளின் மறுமுகம்

Trending News