ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

50 நாட்களுக்கு பீஸ்ட் செய்த வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிப்போர்ட்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட். இப்படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் பீஸ்ட் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ரசிகர்களை கூட இப்படம் திருப்திப்படுத்தவில்லை என கூறப்பட்டது. ஏனென்றால் இப்படத்தில் சிறுவர்கள் கூட நம்ப முடியாத அளவுக்கு சில விஷயங்களை திணிக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

அதனால்தான் தற்போது விஜய் ஆக்சன் படங்களை தவிர்த்துவிட்டு சென்டிமென்ட் படத்தில் நடித்து வருகிறார் எனவும் இணையத்தில் செய்தி கசிந்தது. ஆனால் இதை எல்லாம் தவிடுபொடியாக்கி தற்போது பீஸ்ட் படத்தின் 50வது நாள் வசூல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் பீஸ்ட் படம் 120 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 227 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 2022 இல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பீஸ்ட் படம் பெற்றுள்ளது.

விஜய் என்ற தனி மனிதனுக்காக மட்டுமே பீஸ்ட் படம் இவ்வளவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக விஜய்க்கு தமன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும். மேலும் இதே நாள் அன்று தளபதி 67 படத்திற்கான அப்டேட்டும் வரக் காத்திருக்கிறது. இதனால் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் காத்திருக்கிறது.

Trending News