வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த மாமன்னன்.. வசூலுக்கு எண்டு கார்ட் போட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்த உதயநிதி

Maamannan Collection: உதயநிதி மாமன்னன் படத்தின் மூலம் கதாநாயகனாக தனது சினிமா பயணத்தை முடித்துக்கொள்ளும் திட்டத்தில் இருந்தார். அதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கொடுத்து இருந்தனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி இருந்தது.

ஆரம்பத்தில் மாரி செல்வராஜ் இந்த படத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இசக்கியின் கதாபாத்திரத்தை வைத்து இப்படத்தை எடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதுவே படத்திற்கான பிரமோஷன் ஆக அமைய தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Also Read : இந்தியன் 2 வில் வேண்டா வெறுப்பா கமிட்டான உதயநிதி.. ஒத்த படத்தின் மூலமா அடிக்கப் போகும் பெத்த லாபம்

ஆனாலும் மூன்று மணி நேரம் என்டர்டைன்மென்ட் மட்டுமே எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு மாமன்னன் படம் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. ஆனாலும் தியேட்டரை பொறுத்தவரையில் மாமன்னன் படம் நல்ல வசூலை பெற்று தந்தது. அதன்படி கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

அந்த வகையில் இதுவரை தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் செய்ததாம். போட்ட பட்ஜெட்டை விட கிட்டதட்ட டபுள் மடங்கு லாபத்தை மாமன்னன் படத்தின் மூலம் உதயநிதி பார்த்திருக்கிறார். இது தவிர ஓடிடி நிறுவனத்திற்கும் பெரிய தொகைக்கு மாமன்னன் படத்தை உதயநிதி விற்றிருந்தார்.

Also Read : அரசியலில் இறங்கும் விஜய்.. தண்ணி காட்ட 2 கட்சிகளை உள்ளே இழுக்கும் உதயநிதி

அதன்படி பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் மாமன்னன் படம் வெளியாகி இருக்கிறது. ஆகையால் இனி மாமன்னன் படத்தின் தியேட்டர் வசூல் முடிவுக்கு வந்தது. ஆனாலும் உதயநிதிக்கு இந்த படம் பெரும் தொகையை லாபமாக தான் கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளும் உதயநிதி இனி விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கப் போகிறார். அதன்படி இப்போது பெரிய நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து உதயநிதி தான் தமிழ்நாட்டில் வெளியிட இருக்கிறார்.

Also Read : நியாயவாதியாக நடந்து கொண்ட உதயநிதி.. நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்

Trending News