வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.! பத்து தலக்கு பின் பல மடங்கு உயர்ந்த சம்பளம்

வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து விவரம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சின்னத்திரை சீரியலின் மூலம் வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த பிரியா பவானி சங்கர், எளிமையான தோற்றத்துடன் நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் இருப்பதால் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுவும் சிம்புவின் பத்து தல படத்திற்குப் பிறகு அவர் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். பிரியா பவானி சங்கர் பத்து தல படத்திற்காக 75 லட்சத்தை சம்பளமாக பெற்றார்.

Also Read: 1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. கல்லா கட்டியதா.? முதல் நாள் வசூல் இதுதான்

அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக பிரியா பவானி சங்கருக்கு 1 கோடியை சம்பளமாக கொடுத்துள்ளனர். நாளுக்கு நாள் பிரியா பவானி சங்கரின் மவுசு கூடிக் கொண்டே இருப்பதால் டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, பொம்மை போன்ற படங்களும், ஜீப்ரா என்ற தெலுங்குபடத்தையும் கைவசம் வைத்துள்ளார். பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்தமான சொத்து மதிப்பு 7.5 கோடிகள் ஆகும். அது மட்டுமல்ல இவருக்கு ஈசியாரில் சொந்தமாக ஒரு சொகுசு பங்களாவும் உள்ளது.

Also Read: தலையில தூக்கி வச்சு ஆடும் போதே நினைச்சோம்.. பிரியா பவானி 40% சம்பள உயர்வுக்கு பின் இருக்கும் ரகசியம்

அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் காண்டோ கார் போன்ற விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார். இவ்வாறு அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது இருக்கும் டாப் நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் ஹீரோயின் ஆக மாறி கொண்டு இருக்கிறார்.

அது மட்டுமல்ல ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்களும் தமிழ் பேசும் ரியல் தமிழ் நடிகையான பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பதால், அவரது மார்க்கெட் ரேட் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது.

Also Read: எப்புட்றா! காஞ்சனா படத்தின் அட்ட காப்பிதான் ருத்ரனா? தம்மு, தண்ணி, கஞ்சா விட போதை எது தெரியுமா?

Trending News