வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டி-20 கிரிக்கெட்டில் டஃப் பந்துவீச்சாளர் இவர்தான்.. பிரபல கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்.. அவர் யார் தெரியுமா?

கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீரர் பேட்டிங்கில், ஃபீல்டிங்கில், பந்து வீச்சில், கீப்பிங்கில் புகழ்பெற்றவர்களாக இருப்பர். அந்த வகையில், எல்லோருக்கும் தெரிந்த சச்சின், கோலி, பாண்டிங் லாரா போன்றோர் பேட்டிங்கில் மாஸ்டர்கள். பிரிட்லீ, சிராஜ், பும்ரா, மெக்ராத் போன்றோர் பந்து வீச்சில் புகழ்பெற்றவர்கள். ஜாண்டி ரோஸ், பாண்டிங், கைஃப் போன்றோர் ஃபீல்டிங்கில் புகழ்பெற்றவர்கள்.

அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் அவர்களின் திறமைகளும், விளையாட்டின் மேற்கொண்ட சாதனைகளும், எப்போதும் ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடர் நடந்து வரும் நிலையில், டி-20 கிரிக்கெட்டில் மிக கடினமாக பந்துவீச்சாளர் பற்றி தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

2 வது போட்டியில் இந்தியாவை பழிதீர்த்த தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. எனவே அடுத்த போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் கிளாசென் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

கடினமான பந்துவீச்சாளர் பும்ரா – தென்னாப்பிரிக்க வீரர் புகழாரம்

அதில்,’ ”டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். இவர்கள் இரண்டு பேரும் விளையாடும் ஸ்டைலின் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

இவர்கள் இரண்டு பேருமே, பந்தை நேராகப் பின்புறமாக அடிக்கும் திறன் பெற்றவர்கள். சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு பிடிக்கும். இப்படிப்பட்ட ஷாட்டை நான் விளையாடியது இல்லை. முக்கியமாக கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் ஹரிம் அம்லா. தற்போது டி 20 கிரிகெட் வரலாற்றில் முதன் முறையாக இரட்டை சதம் அடிக்கக் கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்” என நினைக்கிறேன்.

மேலும், டி 20 கிரிக்கெட்டைப் பொருத்தவரை நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களின் கடினமான பவுலர் என்றால் அது பும்ரா தான் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பெருமைப்படுத்தும் வகையில் கிளாசென் கூறியுள்ளது ரசிகர்கள் மற்றும் இந்திய அணியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News