சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகைகள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் சினிமாவில் முதன் முதலில் சாதனை படைத்த ஒரே ஒரு நடிகை டிபி இராஜலட்சுமி. இவர் அன்றைய கால பெண்மணிகளுக்கு பெரும் உதாரணமாக இருந்துள்ளார். சமூக ஆர்வலராகவும் மேலும் குழந்தை பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் வாழ்விற்காகவும் போராடியுள்ளார்.
ஆனால் தனது வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்த டிபி ராஜலட்சுமி அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே சினிமா துறையை தேர்ந்தெடுத்து அதில் தான் நினைத்தபடி அனைத்து துறைகளிலும் கால் பதித்து வெற்றி கண்டார்.
இவர் 1929 ஆம் ஆண்டு கோவலன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்தான் சினிமா துறையில் முதல் முதலில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து உள்ளன. சினிமாவில் உச்சத்தில் இருந்த டிபி ராஜலட்சுமி அதன்பிறகு பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதாவது முதல் முதலில் படத்தை இயக்கிய பெண் இயக்குனரும் டிபி ராஜலட்சுமி தான். 1936ஆம் ஆண்டு மிஸ் கமலா எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு போய் சேர்த்தது. அதன் பிறகு ஒரு சில படங்களையும் தயாரித்தார்.
சினிமா துறையில் முதல் முதலில் ஒரு பெண் கதாநாயகியாகவும் இயக்குனராகவும் சாதனை படைத்த பெருமை டிபி ராஜலட்சுமியை தான் சேரும் இன்று வேணால் பல கதாநாயகிகள் பல நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கலாம் பல சாதனைகளைப் படைக்கலாம். ஆனால் சினிமா உருவான ஆரம்ப காலத்திலேயே சாதனை படைத்தது டிபி ராஜலட்சுமி தான்.
இன்று பல கதாநாயகிகள் சினிமாவில் சிங்கப் பெண் என கூறி வருகின்றனர். ஆனால் உண்மையான சிங்கப் பெண் ராஜலட்சுமி தான் இவர் தான் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல சாதனைகளை படைத்து வெற்றி கண்டார்.