புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இசைஞானியை கோலிவுட் ஒதுக்குகிறதா? இது என்ன ராஜா குடும்பத்துக்கு வந்த சோதனை

70களில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இசைஞானி இளையராஜா, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கன்னட இசை மட்டுமல்லாமல் நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசையில் புலமை பெற்று சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்ற பெருமைக்குரியவர்.

எனவே அந்த காலத்து சினிமா ரசிகர்கள் துவங்கி, தற்போது இருக்கும் இளைஞர்கள் வரை இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் எவருமிலர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய தம்பி கங்கை அமரன், மகன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைவரும் இசை வாரிசுகளாகவே கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் மியூசிக் கிங் என்ற பெயரெடுத்த இளையராஜாவின் குடும்பத்திற்கு தற்போது சோதனைக் காலமாக மாறிவிட்டது. ஏனென்றால் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இளையராஜா போட்ட மியூசிக் நன்றாக இல்லை என்று இயக்குனர் மணிகண்டன் இசையமைப்பாளரை மாற்றிவிட்டார்.

எனவே கடைசி விவசாயி படத்திற்கு தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதேபோன்று இப்பொழுது வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா போட்டோ பிஜிஎம் நல்லா இல்லை என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு இந்த வாய்ப்பை வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் கொடுத்துள்ளார்.

இவ்வாறு ராஜா குடும்பத்தை கோலிவுட் ஒதுக்குகிறதா? என்ற கேள்வி தபோது எழத் தொடங்கிவிட்டது. அத்துடன் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா போட்ட மெட்டு சரியில்லை என இயக்குனர்கள் விமர்சிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்றும் ரசிகர்கள் யோசிக்கின்றனர். ஏனென்றால் ஒரே சமயத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரின் வாய்ப்பு பறிக்கப்பட்டது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சிக்கப்படுகிறது.

Trending News