வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல். அப்படியே இதையும் முடித்துவிடுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இந்த சீரியலில் நடிகர் முன்னா மற்றும் ராஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதில் முன்னா கண் பார்வையற்றவராக நடிக்கிறார்.

இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு நடிகை ராஷ்மி இதில் முக்கிய கேரக்டரில் நடிப்பதால் ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு போகப் போக குறைந்தது. இதற்கு எந்த ஒரு சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாத கதையின் போக்கும் ஒரு காரணமாக இருந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார்.

இவர் விஜய் டிவியில் நடைபெற்ற டான்ஸ் போட்டி மற்றும் சீரியல்களில் நடித்து ஏற்கனவே பிரபலமானவர். அவருடைய வரவிற்கு பின்னரும் கதைக்கு எந்த வரவேற்பும் கிடைக்காததால் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. வெறும் 207 நாட்களை மட்டுமே இந்த சீரியல் கடந்துள்ளது.

விஜய் டிவி சேனல் டிஆர்பியை ஏற்றுவதற்காக புத்தம் புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. நடிகர் பிரஜன், சரண்யா நடிக்கும் வைதேகி காத்திருந்தாள் மற்றும் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா, சித்தார்த், திரவியம் நடிப்பில் உருவாகிவரும் ஈரமான ரோஜாவே 2 ஆகிய சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.

இதன் காரணமாகவே விஜய் டிவி ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருகிறது. ராஜபார்வை சீரியல் முடியப் போவதை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம்இருவர்நமக்குஇருவர் 2, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களையும் முடிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

Trending News