சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

புலி வாலை பிடித்து முழிக்கும் மகிழ்திருமேனி.. விக்னேஷ் சிவனின் மைண்ட் வாய்ஸ் கோலிவுட்டிற்க்கே கேட்கிறது

ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனிடம் இருந்து மகிழ்திருமேனி கைக்கு வந்திருக்கிறது. முதலில் இந்த பட வாய்ப்பு தன்னை விட்டுப் போனதற்கு கவலைப்பட்ட விக்னேஷ் சிவன், இப்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்பை விட சுறுசுறுப்புடன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிறார்.

ஆனால் மகிழ்திருமேனியின் நிலைதான் புலி வாலை பிடித்த கதையானது. எப்படியோ நான் தப்பிச்சிட்டேன் என்ற விக்னேஷ் சிவனின் மைண்ட் வாய்ஸ் ஊருக்கே கேட்கிறது. மகிழ்ந்திருமேனி, ‘இப்படி வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறோமே!’ என்று சொல்லும் அளவிற்கு மிகப் பரிதாபமான நிலையில் இருக்கிறார்.

Also Read: விஜய் சேதுபதியிடம் சரணடைந்த நயன்.. வில்லங்கமான இயக்குனருடன் போடும் கூட்டணி

அந்த அளவிற்கு அஜித் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனமும் செய்து கொண்டிருக்கிறார்கள். விடாமுயற்சி படம் என்னதான் ஆகப்போகுது என்று இயக்குனர் மகிழ்ந்திருமேனிக்கே தெரியவில்லை. இதுவரை நான்கு கதைகள் மாத்தியாச்சு. இன்னும் படத்தின் கதையை ஓரலா கூட அஜித் படிக்கவே இல்லைன்னு வேற சொல்றாங்க.

ஆனால் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கழட்டிவிட்ட விக்னேஷ் சிவன் இப்பொழுது விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன் என அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற பவுலர் தீபக் சாஹர் இவரது தங்கை மால்டி சஹாரை தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படத்திற்கு ஹீரோயினாக புக் செய்துவிட்டார்.

Also Read: பிகில் படம் போல அடுத்த ஸ்போர்ட்ஸ் கதையுடன் ரெடியான விக்னேஷ் சிவன்.. கூட்டு சேரும் நயன்தாரா

இந்தப் படத்தை ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். அதேபோல் கிரிக்கெட் வீரர் தோனியும் தயாரிப்பு பணியில் இறங்கியதால் அவரிடமும் கதை சொல்லி ஒரு படத்திற்கு ஓகே வாங்கிவிட்டார். அதுவும் அந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக போகிறது.

இவ்வாறு ஏகே 62 பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடிப்பது போல் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. நல்லவேளை எஸ்கேப் ஆகிவிட்டோம் என்பதுதான் இப்பொழுது விக்னேஷ் சிவனுடைய மைண்ட் வாய்ஸ் கோலிவுட்டிற்க்கே கேட்கிறது.

Also Read: விஜய்யை விட அஜித்துக்கு ஜோடியாக நடித்ததால் வந்த புகழ்.. வீட்டிற்கு அதே பெயரை வைத்து அழகு பார்த்த நடிகை

Trending News