புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

2வது மனைவியுடன் ஊர் சுற்றும் தகப்பன்.. பார்க்கமுடியாமல் பொங்கிய வாரிசு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமம் இந்த வாரம் நடைபெறுவதால், சீரியலில் கூடுதல் விருவிருப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் கோபி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராதிகாவை ஹனிமூனுக்காக கொடைக்கானல் அழைத்து வந்திருக்கிறார்.

அதேபோல எழில், தான் எடுக்கும் படத்துக்கு லொகேஷன் பார்ப்பதற்காக வந்திருப்பதால் கூடவே குடும்பத்தினரின் மன நிம்மதிக்காக அவர்களை கொடைக்கானலுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இதேபோன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஜீவாவின் நண்பருடைய கல்யாணத்திற்காக கொடைக்கானல் வந்துள்ளனர்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா? காவியா வெளியேற காரணம் இதுதான்

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் பாக்கியலட்சுமி குடும்பமும் ஒருவரை ஒருவர் ஹோட்டலில் சந்தித்துக் கொள்கின்றனர். அதே ஹோட்டலுக்கு கோபி-ராதிகா இருவரும் சாப்பிட வருகின்றனர். அப்போது எழில் தன்னுடைய அப்பா கோபியை எதார்த்தமாக பார்த்துவிட ‘நிம்மதிக்காக கொடைக்கானல் வந்தேன். இங்கேயும் வந்து என்னுடைய நிம்மதியை கெடுக்க பார்க்கிறாய்’ என எழிலை பேச விடாமல் முன்கூட்டியே சுதாரித்துக் கொள்கிறார் கோபி.

அந்த சமயம் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன் ஒருவன் வந்து, ‘நீங்கள் தானே ஹனிமூன் ரூம் வேண்டும் என்று கேட்டீர்கள்!’ என்று கோபியின் முகத்திரையை எழில் முன்பு கிழித்து விடுகிறார். உடனே கோபியை பார்த்து ‘உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா’ என எழில் மானங்கெட்ட பேசுகிறார்.

Also Read: 50 வயதிலும் காதல் குறையாமல் இருக்கும் மன்மதன்.. மகா சங்கமத்தில் கஞ்சியாக போகும் கோபி

அதன்பிறகு அதே ஹோட்டலில் வேறொரு டேபிளில் தன்னுடைய அம்மாவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் அப்பா நெருங்கி உட்கார்ந்து சாப்பிடுவதைத் பார்க்கமுடியாமல் எழில் மனதுக்குள்ளேயே வருத்தம் அடைகிறார். இதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் கண்ணன் மூலமாக கோபி-ராதிகா இருவரும் ஹனிமூனுக்காக கொடைக்கானல் வந்திருக்கிறார்கள் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியப் போகிறது.

இவ்வாறு மகா சங்கமத்தில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்கள் அடங்கியிருப்பதால், நிச்சயம் டிஆர்பி-யில் இந்த வாரம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் டாப் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டு விலகும் முக்கிய நடிகை.. டி ஆர் பி-க்கு வச்சாங்க ஆப்பு

Trending News