செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குஷி பட ஸ்டைலில் ரொமான்டிக் ஏரியாவை காட்டிய அஞ்சலி.. சொக்கி போன ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் அங்காடி தெரு திரைப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து தரமணி, பலூன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த அஞ்சலி தற்போது கிளாமர் ரோலுக்கு மாறியுள்ளார்.

சமீப காலமாக இவர் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸில் லெஸ்பியன் போன்று நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவின் போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

anjali
anjali

அதாவது அஞ்சலி குஷி பட ஜோதிகா பாணியில் கருப்பு நிற புடவையை அணிந்து இடுப்பை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அஞ்சலி மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அஞ்சலியின் நடிப்பில் தமிழில் தற்போது பூச்சாண்டி, காண்பது பொய் போன்ற படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது.

இவர் நடிகர் ஜெய்யுடன் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

anjali
anjali

Trending News