திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டிரெண்டாகும் கிரிக்கெட் படங்கள்.. லால் சலாமுக்கு போட்டியாக வரவிருக்கும் படம்

Lal Salam Movie: குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை காட்டிலும், தற்பொழுது ட்ரெண்டில் இருக்கும் சீசன் படங்கள் ஏராளம். அவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு போட்டியாக வரவிருக்கும் படம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தற்பொழுது நெல்சன் தயாரிப்பில் ரஜினி மேற்கொள்ளும் படம் தான் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று வரும் நிலையில், தன் தந்தை நடிப்பில் இயக்க இருக்கும் ஐஸ்வர்யா, மேற்கொள்ளும் படம் தான் லால் சலாம்.

Also Read: செல்வாக்கு மட்டும் இல்லை என்றால்.. திரைத்துறையில் நுழைய வாய்ப்பே இல்லாத 6 நடிகர்கள்

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். மேலும் ரஜினி, படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது. மேலும் லால் சலாம் ஒரு கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதும் வெளியாகிவிட்டது.

அவ்வாறு இருக்க, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து ஒரே சப்ஜெக்ட் படங்கள் வெளியாகுவது வழக்கமாகிவிட்டது. அதை சீசன் படங்கள் என்று கூறுவார்கள். அவ்வாறு சமீபத்தில் பேய் சீசன் போல தொடர்ந்து ஹாரர் படங்களாக மட்டும் வந்து கொண்டிருந்தது.

Also Read: வாய்ப்புக்காக அலையாமலேயே பெரிய நடிகர்களாக மாறிய 6 பிரபலங்கள்.. கைராசி இயக்குனரான பாரதிராஜா

அதேபோல் தற்பொழுது கிரிக்கெட் சீசன் தொடங்கியுள்ளது. ஏற்கனவே எம் எஸ் தோனி, கனா போன்ற படங்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது லால் சலாமை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் வந்து என்னும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

இதுவும் கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் மக்களிடையே சலிப்பு தோன்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் படத்தின் கதையை பொறுத்தே அவை வெற்றி பெறுமா என்பதை நிர்ணைக்க முடியும்.

Also Read: வந்தியதேவனை ஓவர்டேக் செய்த அருள்மொழி வர்மன்.. 3 ஹீரோயின்களுடன் உருவாகும் அடுத்த படம்

Trending News