Suriya: சூர்யா நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு ஒரு பக்கம் என பிசியாக இருக்கிறார். இதற்கு இடையில் அவருடைய சொந்த பிசினஸ் வேறு லாபத்தை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் அவருடைய கங்குவா படத்திற்கு உலக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் சர்ஃபிரா படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் சூர்யா, ஜோதிகா உட்பட பத்திரிக்கையாளர்கள், பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. தமிழில் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் தான் இப்படம். சுதா கொங்காரா நடிப்பில் அக்ஷய் குமார், ராதிகா மதன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அசத்தல் லுக்கில் சூர்யா
ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் தற்போது படத்தை பிரமோஷன் செய்யும் வேலையில் அனைவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதில் தற்போது மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சூர்யாவின் தோற்றம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
எப்போதுமே பொது இடங்களில் அவர் ஸ்டைலாக தான் வருவார். ஆனால் மும்பை போனதும் அவருடைய லுக் முற்றிலுமாக மாறிவிட்டது. கருப்பு நிறத்தில் உடையணிந்து வந்திருந்த அவர் கண்ணில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருந்தார்.
மேலும் சட்டை பட்டன்களை போடாமல் இருந்த அவருடைய தோற்றமும் புதிதாக உள்ளது. அவரை போலவே ஜோதிகாவும் ரொம்பவும் ஸ்டைலாக வந்திருந்தார். இந்த போட்டோக்கள் தான் இப்போது வைரலாகி வருகிறது.
அதேபோல் படத்தின் நாயகன் அக்ஷய் குமாரும் வழக்கம் போல துருதுருவென அனைவரிடமும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அந்த வீடியோக்களை இப்போது சூர்யாவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.