வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட K.J யேசுதாஸ்.. என்ன ஆச்சு.? மகன் கொடுத்த விளக்கம்

KJ Yesudas: பாடகர் கே ஜே ஏசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் அவருக்கு என்ன ஆச்சு என பதட்டத்தில் இருக்கின்றனர்.

காந்த குரலுக்கு சொந்தக்காரரான இவருடைய பாடல்களை யாராலும் மறக்க முடியாது. 85 வயதாகும் இவருக்கு இன்றைய தலைமுறை கூட ரசிகர்கள் தான்.

தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகன் கொடுத்த விளக்கம்

அவருக்கு உடல்நல பிரச்சனை இருந்ததாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் செய்திகள் கசிந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். அதை அடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.

ஆனால் இந்த தகவல் உண்மை கிடையாது முற்றிலும் வதந்தி. அவர் இப்போது அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார் என யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Trending News