புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மொய்தீன் பாய்க்கு குட்பை சொன்ன ரஜினி.. ட்ரெண்டாகும் புகைப்படம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இதன் முதல் பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதை தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவிற்கான வேலைகளும் தடபுடலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடித்து வந்த லால் சலாம் படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும்.

Also read: அஜித், ரஜினியை மலைபோல் நம்பும் விஜய்.. நீலாங்கரையில் உருட்டிய தளபதி விசுவாசிகள்

இது குறித்த அறிவிப்பு வெளிவந்தது மட்டுமல்லாமல் அந்த கெட்டப்பில் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போட்டோக்களும் மீடியாவில் வைரலானது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் ரஜினியின் கேரக்டர் தான் இப்போது பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

இதனாலேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய காட்சிகளை சூப்பர் ஸ்டார் முடித்து கொடுத்து விட்டாராம். சமீபத்தில் கூட இப்படத்தின் சூட்டிங் திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

Also read: காவாலா பாடலில் தமன்னா மட்டும்தான்.. என்னது தலைவர் இல்லையா? சீக்ரெட்டை உடைத்த படக்குழு

அதில் ரஜினி கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலையாரையும் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவருடைய காட்சிகள் முடிவுற்றதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதை கேக் வெட்டி சிறப்பாகவும் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

அதில் ஐஸ்வர்யா தன் அப்பாவை அணைத்தபடி இருக்கிறார். இவர்களுடன் விஷ்ணு விஷால் உட்பட ஒட்டு மொத்த பட குழுவினரும் இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினி மொய்தீன் பாய்க்கு குட்பை சொல்லி விட்டு அடுத்த கேரக்டரில் நடிக்க தயாராகி விட்டார்.

மொய்தீன் பாய்க்கு குட்பை சொன்ன ரஜினி

rajini-laal-salaam
rajini-laal-salaam

Trending News