செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Vishal: சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதனாலேயே இப்போது படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அதை அடுத்து நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால் ரொம்பவும் சோர்வுடன் காணப்பட்டார்.

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்

அதை அடுத்து மேடையில் பேசும்போது கூட மைக்கை கூட பிடிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்கியது. அதேபோல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நடுக்கத்துடன் தான் வெளிவந்தது.

அந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் ரசிகர்கள் என்ன ஆச்சு அவருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே தொகுப்பாளினி டிடி இதற்கான விடையை கொடுத்தார்.

அதாவது விஷாலுக்கு ஹை ஃபீவர் இருக்கிறது. இருந்தாலும் சுந்தர்.சி-க்காக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார் என டிடி தெரிவித்தார்.

அதை அடுத்து விஷால் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் படத்திற்கான பிரமோஷனா என வழக்கம்போல நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

Trending News