வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

திருச்சி மாநாட்டிற்கு 200 கோடி செலவு செய்த திமுக.. தேர்தல் ஆணையத்தில் பதிவான புகார்!

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க் கட்சியான திமுக திருச்சியில் நடத்திய பொதுக் கூட்டத்திற்கு 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது, சுமார் 2 லட்சம் பேருக்கு உணவு வழங்குவதற்காக 8 உணவகங்கள் திறக்கப்பட்டன. 350 ஏக்கரில் 5 லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தின்போது கூடினர்.

மேலும் 25 ஆயிரம் வாகனங்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நெடுஞ்சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான திமுக கொடி கம்பங்கள் பறக்கவிடப்பட்டது.

இதைத் தவிர பேனர்கள், கட் அவுட்டுகள், பிரம்மாண்ட பந்தங்கள் என செலவு லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது. இதைத் தவிர ஒரு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்பட்டது.

ஆகையால் தேர்தல்  விதிமுறைகளின்படி ஒரு சட்டமன்ற தொகுதியின் செலவு செய்யப்படவேண்டிய அதிகபட்ச தொகை 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தான். அப்படிப் பார்க்கும்போது 180 தொகுதிகளில் போட்டியிடும் திமுக 55 கோடியே 44 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

dmk

ஆனால் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 200 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதால், தேர்தலுக்காக இனி ஒரு ரூபாய் கூட திமுக செலவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கூடிய மனு தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Trending News