திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

61 வயது நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா.. சார் நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை திரிஷாவும் ஒருவர் ஆவார். இவர் கல்லூரியில் படிக்கும் காலங்களில் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். அந்த ஆர்வத்தின் ஆர்வத்தினால் மிஸ் சேலம் போட்டியில் வெற்றி பெற்றார். அதையடுத்து மிஸ் சென்னை போட்டியில் சிறந்த சிறப்பு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .

ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திரிஷா. பின்பு லேசா லேசா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் . இருப்பினும் சில காரணங்கள் காரணமாக லேசா லேசா திரைப்படம் வெளிவர தாமதமானது.

மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் முதன் முதலில் வெளிவந்த திரிஷாவின் முதல் திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார் திரிஷா கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் நாயகி என்ற திரைப்படம் நடித்தார்.

balakrishna-cinemapettai
balakrishna-cinemapettai

அதன் பிறகு தெலுங்கில் நடிக்க வில்லை. தற்போது ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் திரிஷா. தற்போது கோபிசந்த் இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளனர். அவர் பல படங்களில் பிசியாக இருந்ததால் மறுத்துவிட்டார். பின் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனராம்.

பாலகிருஷ்ணாவுக்கு அறுபத்தி ஒரு வயது ஆன நிலையில் அவருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு திரிஷா ஒப்புக்கொண்டு விட்டார். ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் திரிஷா லயன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News