HBD Trisha: தனலட்சுமி டூ குந்தவை.. தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா நிலைத்து நிற்பதற்கு முக்கியமான 6 காரணங்கள்

Trisha bday special
Trisha bday special

Happy Birthday Trisha: த்ரிஷா என்றாலே தென்னிந்திய சினிமாவை பொருத்தவரைக்கும் மேஜிக் தான். இப்போதைக்கு தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட அவரை சொல்லலாம். கிட்டத்தட்ட பீல்ட் அவுட் ஆகி இருக்க வேண்டிய நடிகை பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டர் மூலம் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார்.

அதிலும் சமீபத்தில் கில்லி ரீ ரிலீஸ் ஆகி அந்த தனலட்சுமி கேரக்டரை 2K கிட்ஸ் வரைக்கும் கொண்டு சேர்த்து விட்டது. ஜானு, குந்தவை கேரக்டர்களில் நடித்த திரிஷா 20 வருஷத்திற்கு முன்பு, கிளைமாக்ஸ் காட்சியில் காரப்பொறி சாப்பிடணும்னு ஆசைப்பட்ட க்யூட்டான பொண்ணு என்று நினைக்கும் போது இப்பவும் புல்லரிக்கிறது.

சினிமாவை பொறுத்த வரைக்கும் இத்தனை வருடங்கள் ஆய் ஒரு நடிகை நீடித்திருப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. த்ரிஷா அதை செய்திருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தில் இன்னும் இருப்பதற்கான முக்கியமான ஆறு காரணங்களை பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா நிலைத்து நிற்பதற்கு முக்கியமான 6 காரணங்கள்

அழகி போட்டி: நடிகை த்ரிஷா மாடலிங் துறையில் இருந்து நடிகையாக வந்தவர். பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய 16 வது வயதில் மிஸ் சென்னை பட்டத்தை பெற்றார். இந்த அழகி போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் உடல் பக்குவம் மற்றும் மனப்பாக்குவம் இரண்டுமே த்ரிஷாவுக்கு அத்துபடி. அதனால் தான் இன்று வரை முதல் படத்தில் பார்த்த மாதிரியே தன்னுடைய உடல் அமைப்பை வைத்திருக்கிறார்.

அறிமுக படம்: நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அறிமுகப்படம் என்பது ரொம்ப முக்கியம். அந்த படம் கை கொடுக்காவிட்டால் அடுத்து அவர்களின் வெற்றி என்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அந்த விஷயத்தில் த்ரிஷா பெரிய அதிர்ஷ்டசாலி. முதல் படமே அமீர் இயக்கத்தில், சூர்யாவுடன் இணைந்து நடித்தார். மௌனம் பேசியதே படம் ரிலீஸ் ஆன பிறகு தமிழ்நாட்டை இளைஞர்களின் கனவு கன்னியாக தன்னுடைய சாம்ராஜ்யத்தில் அமர்ந்தார்.

உச்ச நட்சத்திரங்கள்: நடிகை த்ரிஷா முன்னணி இடத்திற்கு குறுகிய காலகட்டத்திற்குள் வந்ததற்கு முக்கிய காரணம் உச்ச நடிகர்கள். தொடர்ந்து மாதவன், விஜய், அஜித் என பெரிய பெரிய ஹீரோக்களுடன் கைகோர்த்து நடிக்க ஆரம்பித்தார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கு கூட கமல் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. ஆனால் த்ரிஷா தமிழ் சினிமா உலகில் பெரிய ஜாம்பவான்கள் ஆக இருக்கும் உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் உடனும் கைகோர்த்து விட்டார்.

ரொமான்டிக் கெமிஸ்ட்ரி: நடிகைகளுக்கு எல்லா மாதிரியான காட்சிகளும் கை கொடுத்தாலும் ரொமான்டிக் காட்சிகள் எப்போதுமே சொதப்பி விடும். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் ரொமான்டிக் என்பதை தாண்டி கிளாமராக தெரிந்து விடும். இதை சரியாக கையாள தெரிந்தவர் தான் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், மாதவன், சூர்யா, சிம்பு, தனுஷ் என அத்தனை ஹீரோக்களுக்கும் பொருத்தமாக ரொமான்டிக் காட்சிகளில் பொருந்தி . நடித்திருப்பார்.

மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்: வருஷத்திற்கு நான்கு ஐந்து படங்களில் கமிட் ஆகும் நடிகைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நடித்த படங்களில் கேரக்டர் பெயர் கூட நம் மனதில் நிற்காது. த்ரிஷாவை பொறுத்த வரைக்கும், ஒரு சில பெயரை கேட்டாலே அவர் மட்டும்தான் ஞாபகத்திற்கு வருவார். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, கில்லி தனலட்சுமி, சாமி மொளகா பொடி மாமி, 96 ஜானு, பொன்னியின் செல்வன் குந்தவை என லிஸ்டில் சேர்த்துக் கொண்டே போகலாம்.

சொந்த வாழ்க்கை; நடிகை திரிஷா தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி வெளியில் அவ்வளவாக அலட்டிக் கொண்டது இல்லை. காதல் தோல்விகள் என்று இவருக்கு இருந்தாலும் இதுவரைக்கும் அதற்கு ஆதாரப்பூர்வமான விஷயங்கள் என்று எதுவுமே எந்த மீடியாவிடமும் சிக்கியது கிடையாது. தன்னுடைய எல்லை தெரிந்து எல்லோரிடமும் உறவை வைத்துக் கொள்வதும் இவர் சர்ச்சையில் சிக்காமல் இருப்பதற்கான பெரிய காரணம்.

Advertisement Amazon Prime Banner