வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இடுப்பழகி சாதனையை முறியடித்த திரிஷா.. 38 வயசானாலும் மார்க்கெட் போகல

பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானார் திரிஷா. அதன்பிறகு 2002 இல் சூர்யாவுக்கு ஜோடியாக மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். அதன்பிறகு லேசா லேசா போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தார்.

திரிஷா கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் காட்டா மேத்தா எனும் ஹிந்தி படம் மூலம் திரிஷா பாலிவுட்டிலும் அறிமுகமானார். கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி, அரண்மணை, 96 போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துள்ளார்.

விஜயுடன் கில்லி, குருவி, அஜித்துடன் கிரீடம், என்னை அறிந்தால், சூர்யாவுடன் மௌனம் பேசியதே, ஆறு, கமலுடன் தூங்காவனம், மன்மதன் அம்பு, தனுஷுடன் கொடி, விஜய் சேதுபதியுடன் 96 என முன்னணி நடிகர்களின் படங்களில் திரிஷா நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாருடன் திரிஷா நடிக்கவில்லை என்ற குறை இருந்தது. அதுவும் பேட்ட படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.

திரிஷாவுடன் அறிமுகமான நடிகைகள் தற்போது அக்கா, அண்ணி, அம்மா பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆனால் திரிஷா திரைத்துறைக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் ஹீரோயின் தான். திரிஷா மனதையும், உடலையும் எப்போதும் இளமையாக வைத்திருக்கிறார். அதனால்தான் இன்றுவரை ஹீரோயின் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

திரிஷாவுக்கு முன்னதாக சிம்ரன் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஹீரோயினாக நடித்தார். சிம்ரன் படத்தில் அறிமுகமான திரிஷா சிம்ரனின் சாதனையை முறியடித்துள்ளார். தற்போதும் பல படங்களை கைவசம் வைத்துள்ள திரிஷா ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ஆக்கோ, ராங்கி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

simran-cinemapettai
simran-cinemapettai

Trending News