திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

Vijay And Trisha Chemistry: நேற்று விஜய் தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இப்போதும் இளமைக் காலத்தில் உள்ள எனர்ஜியுடன், தோற்றத்திலும் இளமையாக காட்சியளிக்கிறார். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் தளபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து திரிஷா விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஜோடிகள் இருக்கிறார்கள். அதில் திரிஷா மற்றும் விஜய்யும் முக்கிய இடத்தில் உள்ளனர். இவர்களது காம்போவில் வெளியான கில்லி படம் பல வருடமாகியும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது. இப்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : விஜய்யின் உடன்பிறப்பாக நடித்த 5 நடிகர்கள்.. அண்ணன், தம்பியாக நடித்து தளபதிக்கு வில்லனான பிரபலங்கள்

இந்நிலையில் நேற்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதன் பிறகு மாலை இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. இப்படம் வெளியாகி சிறிது நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் சினிமா பிரபலங்களும் விஜய்க்கு சமூக வலைத்தளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அந்த வகையில் லியோ படத்தின் கதாநாயகி திரிஷா காஷ்மீரில் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

Also Read : விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

இந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதாவது காஷ்மீரில் கடும் குளிரில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் 14 வருடம் ஆகியும் இவர்களுக்குள் உள்ள கெமிஸ்ட்ரி மாறவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இதன் மூலம் லியோ படம் எப்போது ரிலீஸ் ஆகும் இவர்களை ஒன்றாக திரையில் எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக விஜய் மற்றும் திரிஷா இவர்களின் கெமிஸ்ட்ரியை லியோ படத்தில் சரியாக லோகேஷ் பயன்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-trisha
vijay-trisha

Also Read : பாசமா வளத்தானா பச்சைக்கிளி, கொத்திட்டு போச்சாம் வெட்டுக்கிளி.. விஜய்யின் லியோவால் கடுப்பில் இருக்கும் பெரும் முதலாளி

Trending News