திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Trisha: திரிஷாவின் மொத்த மானத்தையும் வாங்கிய சுச்சி லீக்ஸ்.. ஏர்போர்ட்டில் இருந்து அடித்து பிடித்து சென்ற அம்மணி

Trisha: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது. பாடகி சுசித்ரா கொடுத்த ஒரே ஒரு பேட்டி தான் இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அதில் தனுஷ், கார்த்திக் குமார் பெயர் மட்டுமல்லாமல் த்ரிஷாவின் பெயரும் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அவரின் பல ரகசியங்களை சுசித்ரா வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

அதன்படி சுச்சி லீக்ஸ் சமயத்தில் திரிஷாவின் போட்டோவை கொடுத்ததே அவர்தான் என்ற உண்மை இப்போது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி விஜய் வீட்டு முன்பு திரிஷா டான்ஸ் ஆடியதும் ஒரு கேம் தான்.

திரிஷாவின் கோவம்

இது போன்று இன்னும் பல ரகசியங்களை சுசித்ரா போட்டு உடைத்துள்ளார். அதனாலேயே எப்போது தங்கள் பெயர் வருமோ என பல பிரபலங்கள் பீதியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் திரிஷா ஏர்போர்ட்டில் இருந்து வெளிவந்த போது செய்தியாளர்கள் கில்லி ரீ ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ கடும் கோபத்துடன் எந்த பதிலும் சொல்லாமல் விறுவிறுவென சென்று விட்டார்.

அந்த வீடியோ தான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. எங்கே சுசித்ரா வைத்த குற்றச்சாட்டு பற்றி கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் வேகமாக சென்றுள்ளார்.

அப்போ அதெல்லாம் உண்மைதானா? இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கிறது? என ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் சுசித்ரா சொன்ன பார்ட்டி விஷயங்களும் பகீர் கிளப்பி உள்ளது.

Trending News