திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக பதுங்கி இருக்கும் திரிஷா.. கடும் கோபத்திலும் அடக்கி ஆளும் குந்தவை

Trisha faces trouble in Vidaamuyarchi shooting: நாம் எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதை  நம்மிடம் திணிக்கவும்! நாம் வேண்டுவதை நம்மிடம் இருந்து பிரிக்கவும் செய்வதுதான் இந்த காலத்தின் சூழ்ச்சி. அப்படித்தான்1999 ஆண்டு பதினாறு வயதில் “மிஸ்டர் மெட்ராஸ்” ஆன மாடல் அழகி திரிஷா கிருஷ்ணன், “எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்” என்று உறுதியாக இருந்து பின் தமிழ் திரை உலகில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

2002 ஆண்டு  அமீரின் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திரிஷா, தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் கால் பதித்த திரிஷா சமீபத்தில் சல்மான் கானுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது வசீகர அழகாலும், நேர்த்தியான நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திரிஷாவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கனவாகவே உள்ளது. சமீபத்தில் திரிசாவின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பெயருடன் புகழையும் வாங்கி தந்தது.

Also read: லவ் பண்ணிட்டு 4 ஹீரோக்களை கழட்டி விட்ட திரிஷா.. மிளகாய் பொடி மாமிக்கு ஆப்பு அடிச்ச அஜித்

அதே சமயம் ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் இருக்கும் நயன்தாராவிற்கு போதாத காலமாக, அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தவித்து வருகின்றன. திரை உலகில் திரிஷா மற்றும் நயன்தாராவிற்கு இடையே படங்களை கைப்பற்றுவதிலும் மார்க்கெட்டை காப்பாற்றுவதிலும் இலை மறை காயாக போட்டி நிலவிக் கொண்டே தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன், லியோவின் வெற்றிக்குப் பின் திரிசா அவர்கள் விடாமுயற்சி, மணிரத்தினத்தின் தக் லைப், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் கமிட் ஆகி உள்ளார். நயன்தாரா ஒவ்வொரு படியாக இறங்க இறங்க திரிஷா பல மொழிகளிலும் கட்டம் கட்டி எட்டாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.

இப்படி டாப் கியர்ல போய்க்கொண்டிருக்கும் போது, ஸ்பீட் பிரேக் போல திரிஷாவிற்கு விடாமுயற்சி அமைந்துள்ளது. விறுவிறுவென ஸ்பீட் எடுத்த விடாமுயற்சி கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கை தாமதித்துக் கொண்டே வருகிறார்கள். இதனால் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறதாம். அஜித் பட சூட்டிங் என்பதற்காகவும் தன் பெயர் கெட்டு விடக்கூடாது  என்றும் “கப்பு முக்கியம்  பிகில்ன்னு” பொறுமை காத்து வருகிறாராம் திரிஷா.

Also read: வருமான வரியில் சிக்கிய திரிஷாவின் ஒரு கோடி வைர நெக்லஸ்.. எங்க அப்பன் குதிரைக்குள்ள இல்லைன்னு மாட்டிய ஹீரோ

Trending News