வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாக்ஸ் ஆபீஸ் குயினாக இருக்கும் திரிஷா.. கடைசி 5 படங்களில் கொடுத்த ஹிட்

Trisha : திரிஷா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நிலையில் சில காரணங்களினால் அவர் அக்கடதேசத்திற்கு சென்றுவிட்டார். இங்க புது நடிகைகளின் வரவு மற்றும் அவரது படங்கள் ஓடாததால் இந்த முடிவை எடுத்திருந்தார்.

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு சரியான நேரத்தில் கம்பேக் கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் குயின் ஆக மாறி இருக்கிறார். அதன்படி திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான ஐந்து படங்களுமே பெரிய அளவில் பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகமும் ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

கடைசி ஐந்து படங்களில் ஹிட் கொடுத்த த்ரிஷா

அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தி ரோடு படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் திரிஷாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடு இருந்தார்.

அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இவ்வாறு விட்ட மார்க்கெட்டை திரிஷா மீண்டும் பிடித்துள்ள நிலையில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட்டாகி நடித்து வருகிறார்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் திரிஷா கதாநாயகியாக நடித்து உள்ளார். இது தவிர கமல் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் திரிஷாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Trending News