Trisha Bold Tweet: இன்று காலையில் இருந்து த்ரிஷா தான் சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆக இருக்கிறார். கூவத்தூரில் எம் எல் ஏ ஒருவருக்கு த்ரிஷா கம்பெனி கொடுத்தார். அதுவும் 25 லட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டது என வெளிவந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பகிரங்கமாக இப்படி ஒரு பேட்டியை கொடுத்து தேரை இழுத்து தெருவில் விட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து த்ரிஷாவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தது. ஆனால் மன்சூர் அலிகான் தன்னை பற்றி பேசியபோது உடனே தன் எதிர்ப்பை காட்டிய திரிஷா இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது விமர்சனமாக மாறியது.
அதைத்தொடர்ந்து இயக்குனர் சேரன், டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட பலர் த்ரிஷாவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தில் அவர் லீகலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் கிளம்பியது.
இப்படி பூதாகரமாக வெடித்த இந்த சம்பவத்தை அடுத்து த்ரிஷா சிங்க பெண்ணாக மாறி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். பப்ளிசிட்டிக்காகவும் கவனம் பெறுவதற்காகவும் எந்த நிலைக்கும் செல்லும் கேவலமான கீழ்த்தரமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
இவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான விஷயங்களை என்னுடைய வழக்கறிஞர் குழு பார்த்துக் கொள்ளும் என காட்டமாக தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சரியான பதிலடி என அவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Also read: திரிஷாவை இழுத்து சாக்கடையில் தள்ளிய அரசியல்வாதி.. மன்சூருக்கு மட்டும் Action இப்ப நோ Reaction