திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன்தாரா மார்க்கெட்டை உடைத்து த்ரிஷா கையில் மாட்டிய 5 மெகா பட்ஜெட் படங்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்

Trisha has 5 mega budget films in south indian cinema: தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள த்ரிஷா முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தாகிவிட்டது. த்ரிஷாவிற்கு மட்டும்தான் வயது ஏற ஏற  இளமையும் அழகும் கூடிக் கொண்டே செல்கிறது என்பது மிகையாகாது. வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வந்த த்ரிஷாவிற்கு இந்த வருடமும் வெற்றி ஆண்டாக மெகா பட்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விடா முயற்சி: கிரீடம், மங்காத்தா போல் அஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்து விடாதா என ஏங்கியவருக்கு சொல்லி வைத்தபடியே அழுத்தம் நிறைந்த கதாபாத்திரமாக விடாமுயற்சியில் அஜித்துடன் இணைந்ததோடு படப்பிடிப்பையும் முடித்து விட்டார்  த்ரிஷா. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஜோடியை  இந்த ஆண்டு மத்தியில் திரையில் தரிசிக்கலாம்.

சதுரங்க வேட்டை 2: வினோத் திரைக்கதையில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அரவிந்த்சாமி த்ரிஷா காம்போவை எதிர்நோக்கி உள்ளனர் ரசிகர்கள். இந்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 28 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி போடும் திரிஷா.. கோலிவுட்ல உடையும் மார்க்கெட்

தக் லைப்: பொன்னியின் செல்வனுக்கு பின் மீண்டும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் தக் லைப்பில் இணைந்துள்ளார் த்ரிஷா. இப்படத்தில் இவரது சம்பளம் 12 கோடியாம். இதன் மூலம் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாராவை பின்னுக்கு தள்ளி டாப் ஒன் இடத்திற்கு வந்துள்ளார் த்ரிஷா.

த்வித்வா: பவர் என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமான த்ரிஷா தற்போது பவன் குமார் இயக்கத்தில் கன்னட மூவி ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னட திரை உலகம் இரு கை  நீட்டி திறமையான நடிகை த்ரிஷாவை வரவேற்கிறோம் என்று பதிவிட்டு உள்ளனர். கன்னட உலகில் த்ரிஷாவிற்கு தனி மவுசுதான் போ..

ராம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் திரைப்படத்தில் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் இணைந்து உள்ளார் திரிஷா. மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தினால் கேரளாவிலும் திரிஷாவின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்களின் மூலம் நயன்தாரா மார்க்கெட்டை உடைத்து த்ரிஷா கடகடவென முன்னேறி வருகிறார் என்றே கூறலாம்.

Also read: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக பதுங்கி இருக்கும் திரிஷா.. கடும் கோபத்திலும் அடக்கி ஆளும் குந்தவை

Trending News