வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ரீ என்ட்ரி-யில் த்ரிஷாவிற்கு அடித்த சுக்கிர திசை.. 50 கோடிக்கு மேல் சம்பளம், ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் திரையுலகம்

Actress Trisha: வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் உன்னை விட்டு போகலை என்பதற்கு ஏற்ப 40 வயது தாண்டிய நிலையிலும் பருவ மங்கையாக ஹீரோயின் அந்தஸ்துடன் ஜொலித்துக் கொண்டு வருகிறார் திரிஷா. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய மார்க்கெட் சரிஞ்ச நிலையிலும், அதை தூக்கி நிறுத்தும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மறுபடியும் முன்னணியில் வந்து விட்டார்.

அப்படிப்பட்ட இவர் தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்திலும் திரிஷா கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

அடுத்ததாக கமல் நடிக்க இருக்கும் KH234 படத்திலும் திரிஷா ஜோடி சேர்கிறார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்திலும் திரிஷா தான் கமிட் ஆகி இருக்கிறார். இதனை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹிந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

இப்படி தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து இவருடைய செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு ஹீரோயின் இரண்டாவது முறை ரீ என்டரி கொடுத்து நடிப்பது மிகப்பெரிய விஷயம். இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் எந்த ஒரு ஹீரோயினுக்கும் கிடைச்சதே இல்லை.

Also read: திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

இன்னும் சொல்லப் போனால் இனி நயன்தாரா கூட இவருடைய இடத்தை தொட முடியாது. மறுபடியும் இந்த ஹீரோக்களுடனும் ஜோடி சேர முடியாது. அந்த அளவிற்கு த்ரிஷா தற்போது கொடிகட்டி பறந்து வருகிறார். முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் இவருடைய சம்பளம் எகிறிக்கொண்டே வருகிறது.

கிட்டத்தட்ட இவருடைய சம்பளம் 50 கோடிக்கு மேல் உயர்ந்து கொண்டே வருகிறது. இதெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு அனைத்து திரையுலகமும் வாயை பிளந்து வருகிறது.  த்ரிஷாவிற்கு ரீ என்ட்ரி-யில் அடித்த சுக்கிர திசை என்றே சொல்லலாம்.

Also read: சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

- Advertisement -spot_img

Trending News