புதன்கிழமை, ஜனவரி 22, 2025

திரிஷாவை விட 6 வயசு கம்மி.. ஆனாலும் 100 கோடி வசூல் நாயகனுடன் ஜோடி

Actresss Trisha: திரிஷா தற்போது 40 வயதிலும் சினிமாவில் காம்பேக் கொடுத்த பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி தி ரோட்டு என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்துள்ளார். இது தவிர முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு திரிஷாவுக்கு குவிந்து வருகிறது.

அந்த வகையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் நடிக்க இருக்கிறாராம். இந்த வாய்ப்பு எல்லாமே அவருக்கு பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாகத்தான் கிடைத்தது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக திரிஷா நடித்திருந்தார்.

Also Read : திரிஷாவை விட அதிக கால்ஷீட் இவருக்கு தானாம்.. லியோவில் பரபரப்பை ஏற்படுத்தும் லோகேஷ்

இதை அடுத்து தான் அவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. இந்நிலையில் 100 கோடி வசூல் நாயகனின் படத்தில் திரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். அதாவது மலையாளத்தில் திரிஷா ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். இப்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அதாவது சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 2018. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் என்பவர் நடித்திருந்தார்.

Also Read : விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

இந்நிலையில் தற்போது இவர் ஐடென்டிடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் தான் திரிஷா கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். மேலும் டொவினோ தாமஸ் திரிஷாவை விட ஆறு வயது இளமையானவராம். ஆனாலும் இவர்களது ஜோடி திரையில் பார்க்க நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தை அகில்பால் மற்றும் அனாஸ்கான் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஃபாரன்சிக் படத்தை இவர்கள் இயக்கி இருந்தார்கள். அந்தப் படத்திலும் கதாநாயகனாக டொவினோ தாமஸ் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Also Read : திரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுக்கும் அதே பெயர்தானா?. சென்டிமென்டால் பாடாய்படுத்தும் இயக்குனர்

Trending News