திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பட வாய்ப்பு இல்லாததால் 61 வயது நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்த திரிஷா.. கைவிட்டதா கோலிவுட்.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிகை நயன்தாரா போலவே சோலோ நாயகி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இருப்பினும் நயன்தாராவின் இடத்தை த்ரிஷாவால் பிடிக்க முடியவில்லை. அவர் அளவிற்கு இவருக்கு படவாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

தமிழில் இறுதியாக பரமபதம் படத்தில் நடித்த த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து மலையாளத்தில் உருவாகி வரும் ராம் என்ற புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான லயன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர்.

பிரபல இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்புதிய படமே பாலகிருஷ்ணாவின் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்காக திரிஷாவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர். திரிஷா இறுதியாக தெலுங்கில் 2016ஆம் ஆண்டு வெளியான நாயகி என்ற படத்தில் நடித்திருந்தார்.

trisha-cinemapettai
trisha-cinemapettai

எனவே இந்த புதிய படத்தில் திரிஷா நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானால் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா நடிக்கும் தெலுங்கு படம் இதுவாக இருக்கும். தற்போது இப்படத்திற்காக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News