வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கல்யாணத்தை நிறுத்த காரணம் இதுதான்.. திரிஷாவிடம் இருந்து கசிந்த தகவல்

சாதாரணமாக நடிகைகள் எவ்வளவு வேகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதைவிட வேகமாக விவாகரத்து செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு அவர்களால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இவ்வளவு ஏன் ஆசையாசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நான்கு வருட வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய வில்லையா. சமந்தாவின் சினிமா ஆசை தான் அந்த விவாகரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்கிறார்கள் அவர்களது தரப்பு.

ஆனால் இப்படி எல்லாம் முன்னாடியே நடக்கும் என தெரிந்ததால் என்னவோ திரிஷா வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதோடு நிறுத்திவிட்டார். திருமணம் வரை செல்லவில்லை. சில நடிகைகளைப் போல திரிஷாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்தார்.

அப்போது தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் காதல் வலையில் விழுந்த தான் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து நிச்சயதார்த்தத்தை மிகவும் பிரமாண்ட முறையில் செய்தார். அதன் பிறகு காரணமே சொல்லாமல் இருவரும் நிச்சயதார்த்த துடன் தங்களது உறவை முறித்துக் கொண்டனர். அதன்பிறகு இருதரப்பிலும் திருமணத்தை பற்றிய பேச்சுக்களே எடுக்கவே இல்லை.

trisha-cinemapettai
trisha-cinemapettai

அதற்கான காரணமும் ஒரு நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில்தான் திரிஷா தரப்பில் இருந்து ஒரு தகவல். திரிஷா திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் அதற்கு அவர்களது தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டவில்லை எனவும் தெரிகிறது. என்னால் சினிமாவை விட்டு இருக்க முடியாது என்று கூறி வருண் மணியனை திரிஷா நிராகரித்து விட்டதாக கூறுகின்றனர்.

Trending News