நம்பர் ஒன் இடத்திற்கு அடி போடும் த்ரிஷா.. பஞ்சையும் நெருப்பையும் பற்ற வைக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடிகைகள் எவ்வளவு பெயர் எடுத்தாலும் திருமணம் நடந்து விட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது நிதர்சனம். எடுத்துக்காட்டாக அதற்கு நிறைய நடிகைகள் இந்து வருகிறார்கள். தற்போது தன் பெயரை கெடுத்து வாழ்ந்து வரும் நயன்தாரா முதற் கொண்டு, அந்த வரிசையில் அதில் எப்படியோ தப்பித்து வரும் திரிஷாவை பற்றி பேச்சுக்கள் இடம்பெறுகிறது.

திரிஷாவுக்கு வயது ஏற ஏற முக அழகு கூடுகிறது என்பது பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த அனைவருக்கும் புரியும். இப்பொழுது திரிஷாவின் மதிப்பு உயர தொடங்கியுள்ளது. இன்னும் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வமாகவும் நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் அடிக்கடி இவரிடம் கேட்கும் கேள்வி உங்கள் திருமணம் எப்போது என்று கேட்பது மட்டுமே.

Also Read : திரிஷா படத்தில் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

அதற்கு திரிஷா ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்கும் பொழுது கோவமாக வருகிறது. இதுவே எப்போது திருமணம் செய்ய உங்களுக்கு விருப்பம் என்று கேட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். என்னை சுற்றி நிறைய பேர் திருணம் செய்து கொண்டு மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அதில் என் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. ஒருவரைப் பார்த்தால் வாழ்நாள் முழுதும் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

தற்போது சினிமாவில் அதிக வயதில் திருமணம் செய்யாமல் இருக்கும் இரண்டு முக்கிய நடிகர், நடிகை சிம்பு மற்றும் திரிஷா. ஏற்கனவே இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்று கிசுகிசுக்கள் ஏற்பட்டன. திரிஷாவுக்கும் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். இவர்கள் காதல் காட்சிகளில் நடிக்கும் போது நமக்கு அது புரிந்து, செமிஸ்ட்ரி செம்மையாக இருக்கும். அதனால் தற்பொழுது இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்தி வெளிவருகிறது.

Also Read : ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

விண்ணைத்தாண்டி வருவாயா-2 எடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் கௌதம் மேனன் அதில் இவர்கள் நடித்தால் கண்டிப்பாக இவர்களுக்குள் காதல் தோன்றி திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. இவர்கள் இருவருமே திருமணத்தைப் பற்றிப் பேசும்பொழுது மிக அனுபவமாக இப்பொழுது பேசி வருகிறார்கள், ஆகையால் இவர்கள் இருவரும் திருமணம் செய்வது சாத்தியம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

சிம்பு, திரிஷா இருவரும் இணைந்தால் கண்டிப்பாக விவாகரத்து என்ற பேச்சு இல்லாமல் வாழ்வார்கள். காரணம் இவர்களின் காதல் தோல்வி மற்றும் சினிமா வாழ்க்கை மற்றும் தற்போது இவர்களுக்கு உள்ள அனுபவம் இந்த அடிப்படையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை.

Also Read : குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா