பொன்னியின் செல்வன் சம்மந்தப்பட்ட தகவல்களோ, புகைப்படங்களோ இப்போதைக்கு ரொம்ப ஹாட்டாக்காண விஷயம். அதற்கு காரணம் MGR காலத்திலிருந்தே இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து முடியாமல் கைவிட்டு இருக்கிறார்கள். மேலும் பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்கள் அதிகம். இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஸ்பாட்டிலிருந்து புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஆசிரியர் கல்கியின் அரும்பெரும் படைப்பான பொன்னியின் செல்வனை மணிரத்னம் தற்போது படமாக்கி கொண்டிருக்கிறார். வயதினால் நலிவுற்ற சோழ அரசன், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு யார் வர போவது என்ற எதிர்பார்ப்பு, சோழ மன்னனின் இளமைக்கால உறவால் பின்தொடரும் நிழல், சோழ அரசனின் மூத்த மகனை தொடரும் தீரா பகை, அரசியல் என சுவாரஸ்யங்களை அதிகம் கொண்ட பொன்னியின் செல்வன் புதினம் தான் இப்போது படமாகி கொண்டிருக்கிறது.
Also read: அதை மட்டுமே சாப்பிட்டு 20 கிலோ கம்மியான ஜெயம் ரவி.. இது சாத்தியமா என குழம்பிய மணிரத்னம்
இன்று இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் த்ரிஷா மற்றும் கார்த்தி இருக்கின்றனர். த்ரிஷா ராணி கெட்டப்பில் லைட்களுக்கு முன்னாள் இருக்கிறார். அதன் பின்னால் கார்த்தி சாதாரண உடையில் நின்று கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு, இளவரசி குந்தவையும், வந்தியதேவனும் சிறையில் சந்தித்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல தெரிகிறது. வந்தியத்தேவனை சிறையில் சந்தித்து பேசி, குறிப்பு ஓலையை கொடுத்து பின்னர் இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மரிடம் அனுப்பி வைப்பார். இந்த காட்சியில் தான் குந்தவை-வந்தியத்தேவனின் காதலும் வெளிப்படும்.
திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படம்
Also read: பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராமனின் கதாபாத்திரம்.. கனகச்சிதமாக தேர்வு செய்த மணிரத்னம்
பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதன் முதலில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் இந்த படம் உருவாகியுள்ளது. 570 கோடி இந்த படத்தின் பட்ஜெட் ஆகும் . லைகா நிறுவனமும் , மெட்ராஸ் டாக்கீசும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
Also read: ஒரே வரி கதையில் ஓகே செய்த மணிரத்னம்.. 21 வருடம் கழித்து இணையும் கேங்ஸ்டர் கூட்டணி
பொன்னியின் செல்வன் என்பது 5 பாகங்களை கொண்ட புதினம். இதை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த படத்தின் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து மீண்டும் இந்த நாவலை அனைவரும் படிக்க தொடங்கி இருக்கிறார்கள்.