திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து த்ரிஷாவுக்கு வந்த அறிக்கை.. விடாமல் தொடரும் பிரச்சினை

Trisha: திரிஷா 40 வயது தாண்டிய நிலையிலும் இன்னும் வரை ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு மேல் பல போட்டிகளுக்கு நடுவில் முன்னணி ஹீரோயினாக தற்போது வரை இவருக்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்றால் முழுக்க முழுக்க இவருடைய தன்னம்பிக்கையுடன் நடிப்பு மட்டுமே காரணம். அதனால் தான் 15 வருடங்களுக்குப் பிறகும் விஜய் கூட ஜோடி போட்டு லியோ படத்தில் நடிக்க முடிந்தது.

அப்படிப்பட்ட இவருடைய பெயர் தற்போது சர்ச்சையில் அடிபட்டு இருக்கிறது. அதாவது லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரிஷாவை பற்றி அவதூறாக பேசி கொச்சை வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் கடுப்பான த்ரிஷா மன்சூருக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்.

இவரை தொடர்ந்து பல பிரபலங்களும் மன்சூர் செய்தது தவறு. அவரு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விமர்சித்து வந்தார்கள். அத்துடன் பெண்களை இப்படி அவதூறாக பேசிய காரணத்திற்காக மகளிர் தேசிய காவல் நிலையிலிருந்து வழக்குப்பதிவும் கொடுத்திருந்தார்கள். இதனால் கடைசியில் மன்சூர், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

Also read: அவர் பாணியில் மன்னிப்பு கேட்ட மன்சூர்.. குதர்க்கமாக குத்தி காமிச்ச திரிஷாவின் சேட்டை

திரிஷாவும் தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வகுணம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனால் இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது என்று நினைக்கும் பட்சத்தில் மறுபடியும் விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது. அதாவது தற்போது த்ரிஷாவுக்கு ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து புகார் அளித்ததற்கான விளக்கத்தை வந்து சொல்லுமாறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

இதனால் த்ரிஷா நடந்த விஷயங்களை சொல்லி எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்குமாறு த்ரிஷாவுக்கு போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கும் சமயத்தில் மறுபடியும் கிளரும் விதமாக ஏன் த்ரிஷாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவைத்து லெட்டர் மூலம் கேட்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. திரிஷாவை பற்றி சொல்லியதற்கு மன்சூரும் மன்னிப்பு கேட்டு விட்டார்.

அதற்கு த்ரிஷாவும் பதில் கொடுத்துவிட்டு நிலையில் மறுபடியும் இந்த பிரச்சனை தொடர்வதற்கான காரணம் என்ன. இதற்கு பின்னணியில் இருந்து திரிஷாவுக்கு லெட்டர் அனுப்ப சொன்னதற்கான விஷயம் என்னவாக இருக்கும் என்று தற்போது பல கேள்விகள் எழும்பி வருகிறது. அந்த வகையில் இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.

Also read: மீண்டும் திரிஷாவை வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான்.. வெடிக்கும் சர்ச்சை

Trending News