Trisha: 22 வருடங்களுக்கு மேலாக திரிஷா ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 41 வயதை கடந்த நிலையிலும் சிங்கிளாக வலம் வரும் இவர் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா

அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் திரிஷா தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
திரிஷாவின் க்யூட் போட்டோ

அதில் அவர் கேக் வெட்டுவது பூங்கொத்துகளுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது என கலக்கலாக இருக்கிறார். ஆனால் மற்றொரு போட்டோ தான் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாய்பாபா

அதாவது சாய்பாபா கோவிலின் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அவர் இந்த பிறந்த நாளில் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டதாக பேசப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ அது உண்மைதான் என தெரியப்படுத்தி இருக்கிறது. இதைத்தான் ரசிகர்களும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக திரிஷாவால் விஜய்யின் குடும்பத்தில் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவர் அதற்கு பதிலளிக்காத நிலையில் தற்போது இந்த போட்டோ ஒரு முணுமுணுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.