திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரச்சனைன்னு உடனே ஓடி வந்த 3 அண்ணன்களுக்கும் நன்றி.. கூவத்தூர் மேட்டரை சும்மா விட கூடாதுன்னு கதறிய திரிஷா

Trisha: பிறரிடம் இருந்து கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக சிலர், முக்கியமான பிரபலங்களை வம்பிழுக்கும் விதமாக பேசி வருகிறார்கள். இதில் நடிகை த்ரிஷாவும் மாட்டிக் கொண்டார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, கொஞ்சம் கூட வாய் கூசாமல் நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியாகி இருந்தார்கள்.

இதற்கிடையில் த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங்காக செர்பியாவிற்கு போயிருக்கிறார். அங்கே படப்பிடிப்பு மிக மும்மரமாக போனதால் அனைவரது மொபைலும் ஸ்விட்ச் ஆப் பண்ணி லாக்கரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் கூவத்தூர் மேட்டர் பற்றி அவருக்கு உடனே தெரியவில்லை.

பிறகு 24 மணி நேரம் கழித்துதான் விஷயத்தை த்ரிஷா அறிந்திருக்கிறார். அதன் பின் அவருக்கு பதிலடி கொடுத்து சட்டரீதியாக இந்த விஷயத்தை நான் டீல் பண்ணுவேன் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கிடையில் த்ரிஷாவை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஓடோடி வந்து சப்போர்ட் செய்தவர்கள் சேரன், சமுத்திரக்கனி மற்றும் நாசர்.

Also read: மணிரத்தினம் போட்ட ஆர்டர்.. கூவத்தூர் சர்ச்சைக்கு நமத்துப்போன பட்டாசாக த்ரிஷா இருக்க இதுதான் காரணம்

இவர்கள் மூன்று பேரும் த்ரிஷாவிற்கு ஒரு பிரச்சினை என்றதும் உரிமை குரல் கொடுத்து சப்போர்ட் செய்தார்கள். அந்த வகையில் தற்போது த்ரிஷா எனக்காக பேசிய மூன்று அண்ணன்களுக்கு ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும் இதோடு இந்த விஷயத்தை சும்மா விட்ற கூடாது, கண்டிப்பாக இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி பெப்சி யூனியனிடம் பேசி அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் திரிஷாக்கு மட்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தான் செகண்ட் இன்னிங்ஸ் மூலம் முன்னணி ஹீரோயினாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அதற்குள் ஏகப்பட்ட பிரச்சினையை சந்திக்கும் அளவிற்கு த்ரிஷா ஒவ்வொரு நாளும் கதறி கொண்டு வருகிறார்.

Also read: அருந்ததி வாய்ப்பை தட்டி தூக்கிய த்ரிஷா.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படம்

Trending News