திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஓமன பெண்ணே.. மீண்டும் இணைந்த சிம்பு திரிஷா, எந்த படம் தெரியுமா?

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு த்ரிஷா இன்றளவும் favorite ஜோடியாக வளம் வருகின்றனர். இன்றளவும் எங்களுக்கு பார்ட் 2 வேண்டும் என்று கேட்டு கொண்டு தான் இருக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையில், இவர்கள் செமிஸ்டரியை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

இந்நிலையில் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிம்பு திரிஷா காம்பினேஷன்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அது மட்டுமின்றி, சிம்பு திரிஷா இணைந்து நடிக்கும் பாடலின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த அப்டேட் த்ரிஷாவே தந்துள்ளார்.

இதை தொடர்ந்து, இருவரும் சாதாரணமாக ஒரே Screen-இல் வந்தாலே, ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல் படி, இருவரும் லவ் portions-ல் தான் நடித்துள்ளனர். இருவருக்குள்ளும் உள்ள அந்த chemistry படத்தில் நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்ததோடு, எப்போ ரிலீஸ் ஆகும் என்று ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் இந்த பாடல், த்ரிஷா நடனமாடுவதை சிம்பு தூரத்தில் இருந்து பார்ப்பதை போல இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறப்படுகிறது. இனி படத்தை பார்க்க GVM Fans-ம் கிளம்பிவிடுவார்கள்.

Trending News