வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹைதராபாத்தை விட்டு விரட்டப்பட்ட திரிஷா.. லிவிங் ரிலேஷன்ஷிப்பால் பயந்து போன திரையுலகம்

திரிஷா நடிப்பில் தற்போது வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லியோ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்கள் ஜோடி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின் மறுபடியும் இவர்கள் இருவரும் இணைந்ததால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 வயதை தாண்டிய நிலையில் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் கனவு கன்னியாகவே டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கிருக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண்மனியுடன் 2015இல் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அது நின்று போய்விட்டது. அதனால் விரக்தியில் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி நடிக்கப் போய்விட்டார். அங்கே ஆல்ரவுண்ட் கலக்கி வந்தார். பாலகிருஷ்ணா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

Also read: திரிஷாவின் முதல் வெற்றி படம்.. இல்லாத ஒரு விஷயத்துக்காக அடித்து கொள்ளும் நம்பர் நாயகிகள்

அதன்பிறகு தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதன் மூலம் அங்கே நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். இவர் இது போன்று தொடர்ந்து நடித்தால் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துக் கொள்வார் என்ற பயத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் சேர்ந்து இவருக்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள். அத்துடன் ஹைதராபாத்துக்கும் வரக்கூடாது என்று பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டது.

இவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகர் ராணா டகுபதி. இவர்கள் இருவருமே உறவில் இருப்பதாக பல சர்ச்சையில் சிக்கி அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகி வந்தது. முதலில் இவர்கள் அப்படி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சொன்ன நிலையில் இவரது புகைப்படங்கள் இவர்களை காட்டிக் கொடுக்கும் விதமாக வந்தது.

Also read: குந்தவை திரிஷா காதலனுடன் டேட்டிங் செய்த பிக் பாஸ் பிரபலம்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட நடிகை

அதன் பின் வேறு வழி இல்லாமல் இவர்களை ஒத்துக் கொண்டார்கள். இதனால் இவர் படம் நடிப்பதற்கு அங்கே வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதன் பிறகு தமிழில் மறுபடியும் பொன்னின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி ஆனார். அதில் குந்தவையாக நடித்து பல பேர் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு அதிக அளவில் உள்ளதால் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

அத்துடன் லியோ படத்திலும் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் அதிகரித்து தான் வருகிறது. சமீபத்தில் இவருடைய 40வது பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து அடுத்த வருடம் திருமணம் ஆகுவதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படியே இவருடைய வாழ்க்கையை ஓட்டி விடாமல் கால காலத்தில் ஒருவரை கரம் பிடித்தால் இப்பொழுது சம்பாதித்து வைத்த இமேஜை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

Also read: அவ மார்க்கெட்டை குறைக்காமல் ஓய மாட்டேன்.. சபதத்திற்காக திரிஷா எடுத்த விபரீத முடிவு

Trending News