ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

துண்ட காணும் துணிய காணும்னு ஓடி வந்த திரிஷா.. படாதபாடு படும் காமெடி நடிகர்

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் நடிக்காமல் இருந்த திரிஷா இப்போது பொன்னியின் செல்வன் புண்ணியத்தால் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். அந்த படத்தில் இளவரசியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் 39 வயதிலும் 18 வயது பெண்ணை போல் இருக்கும் அவருடைய அழகு தான்.

அந்த வகையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் இவர் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட இந்த டீம் படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்கு பறந்தது. ஆனால் சென்ற வேகத்திலேயே திரிஷா துண்டைக் காணும் துணிய காணோம் என்று அலறி அடித்து திரும்பி சென்னைக்கே வந்து விட்டாராம்.

Also read: லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

இந்த விஷயம் தான் இப்போது மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏதோ பிக்னிக் போவது போல் சந்தோஷமாக பட குழுவினர் அனைவரும் ஒரே விமானத்தில் காஷ்மீருக்கு சென்றார்கள். இது குறித்த வீடியோவும் வெளியாகி பலரையும் பரவசப்படுத்தியது. ஆனால் திரிஷா திடீரென அங்கிருந்து வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் திரிஷா அந்த படத்தில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் உண்மையில் த்ரிஷாவால் காஷ்மீர் குளிரை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதால் தான் வந்துவிட்டாராம். குளிர் பிரதேசமான காஷ்மீரில் இப்போது அளவுக்கு அதிகமாக குளிர் வாட்டி வதைக்கிறதாம். ஆனாலும் விஜய் படத்தை எப்படியாவது விரைவாக முடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.

Also read: உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.? விஜய், தில்ராஜை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை, K.ராஜன்

ஆனால் அந்த குளிரை தாங்க முடியாத திரிஷா என்னுடைய பார்ட் வரும்போது வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பி இருக்கிறார். தயாரிப்பு நிர்வாகமும் அதற்கு சம்மதித்து இருக்கிறது. ஆனால் திரிஷா போல் எஸ்கேப் ஆக முடியாமல் நடிகர் மனோபாலா ரொம்பவும் அவதிப்பட்டு வருகிறாராம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவருக்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துடன் அதிக காட்சிகள் இருக்கிறதாம்.

அதனால் அவர் கட்டாயம் அங்கு இருந்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலைமையில் இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் இந்த வயதான காலத்திலும் அந்த குளிரில் கஷ்டப்பட்டு நடித்து வருகிறாராம். இப்படி கோலாகலமாக நடந்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய பகுதிகளிலும் படமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தளபதி 67 முழு கதையைக் கேட்டவுடன் விலகுகிறாரா த்ரிஷா.? தூக்கி வாரி போட்ட சம்பவம்

Trending News