செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

39 வயது நடிகருக்கு அம்மாவாகும் திரிஷா.. இது என்ன குந்தவைக்கு வந்த சோதனை

Actress Trisha: தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள த்ரிஷா இப்போது நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் மூலம் உயர்ந்துள்ள இவருடைய மார்க்கெட் தற்போது லியோவால் எகிறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்திலும் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். விரைவில் இது குறித்த அப்டேட் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் 39 வயது நடிகர் சர்வானந்துக்கு 40 வயதான திரிஷா அம்மாவாக நடிக்கப் போகும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: திரிஷா போல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. புதுப்பட அப்டேட்டால் பதறும் ஹீரோயின்கள்

அதாவது மலையாளத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பிரித்விராஜ் இயக்கி நடித்திருந்த இப்படத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். அதில் மீனா ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

அந்த கேரக்டரில் நடிப்பதற்கு தான் த்ரிஷா இப்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம். மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். மகன் கேரக்டரில் சர்வானந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷா அனைத்து டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

Also read: 40 வயதில் ஜெயித்த 3 நடிகைகளை ஃபாலோ பண்ணும் நயன்தாரா.. சுக்கிர திசையில் திரிஷா, அதிரடி முடிவில் நயன்

கடந்த 2015 ஆம் ஆண்டு இவரின் நாயகி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. அதன் பிறகு இவர் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு பக்கம் செல்லும் இவர் அம்மா கேரக்டரில் நடிக்க உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

எதற்காக த்ரிஷா இதில் நடிக்க சம்மதித்தார் என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு ஆர்வமும் ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில் திரிஷாவின் இந்த வித்தியாசமான முயற்சி எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: திரிஷாவின் காதலன் தயாரிப்பில் சமுத்திரகனியின் மாஸ் கூட்டணி.. இயக்குனராக நிரூபிக்காமல் விடமாட்டேன்!

Trending News